2022 ஆகஸ்ட் பெஸ்ட் இதுதான்- இந்த டாப் 5 சூப்பர் போன்களை மிஸ் பண்ணிடாதீங்க.!

|

5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்பதால் சீன செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சியோமி, விவோ, ஒப்போ ஆகிய நிறுவனங்கள் தரமான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும். மேலும் தற்போது இந்தியாவில் ரூ.30,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

 1.ஒப்போ ரெனோ 8

1.ஒப்போ ரெனோ 8

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ரெனோ8 ஸ்மார்ட்போனை ரூ.29,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

புதிய ஒப்போ ரெனோ 8 போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போன் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்ஆதரவைக் கொண்டுள்ளது.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

ஒப்போ ரெனோ 8 கேமரா

ஒப்போ ரெனோ 8 கேமரா

ஒப்போ ரெனோ 8 போன் 50 எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன்.

2.ரெட்மி கே50ஐ

2.ரெட்மி கே50ஐ

எம்ஐ இணையதளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை ரூ.25,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. மேலும் 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, HDR10 ஆதரவு, டால்பி விஷன் மற்றும் 650 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்

 ரெட்மி கே50ஐ பேட்டரி

ரெட்மி கே50ஐ பேட்டரி

ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனில் 5,080mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பின்பு இந்த போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பை கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!

3.ஐக்யூ நியோ 6

3.ஐக்யூ நியோ 6

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 870 5G பிராஸசர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது.

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனை ரூ.29,999-விலையில் வாங்க முடியும். பின்பு 4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் மாடல்.

ஐக்யூ நியோ 6 கேமரா

ஐக்யூ நியோ 6 கேமரா

64 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிடபிள்யூ1பி முதன்மை சென்சார், 8 எம்பி இரண்டாம் நிலை வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. மேலும் 16 எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன்.

4.போக்கோ எஃப்4

4.போக்கோ எஃப்4

பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்4 போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன்.

மேலும் 6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

போக்கோ எஃப்4 சிப்செட்

போக்கோ எஃப்4 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு இதில் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவுஉள்ளது.

 5. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ்

5. சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ்

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனை ரூ.26,999-விலையில் வாங்க முடியும். இந்த சியோமி போன் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

மேலும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது இந்த சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போன். பின்பு 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள்இவற்றுள் அடக்கம்.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் கேமரா

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் கேமரா

108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் போன். பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones to Buy in August 2022: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X