மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5.!
மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!
உலகின் மிகப்பெரிய மொபைல் துறை ஒன்றுகூடல் நிகழ்வான எம்டபுள்யூசி 2017 நிகழ்வானது பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 தேதி வரையிலாக பார்சிலோனாவில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டும் புதிய ஸ்மார்ட்போன்கள் மேலோங்கி கடந்த ஆண்டை போலவே மொபைல் சந்தையில் மாபெரும் போட்டி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நோக்கியா ஆண்ட்ராய்டு, எச்டிசி மற்றும் எல்ஜி ஆகிய நிறுவனங்களின் பல அற்புதமான தொலைபேசிகளின் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியாக மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

நோக்கியா 8
நோக்கியா 6 போன்று மிட் ரேன்ஜ் கருவியாக இல்லாமல் நோக்கியா 8 கருவியானது நிறுவனத்தின் உயர் இறுதி ஸ்மார்ட்போனாக வடிவமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பு அடிப்படையில், அது தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி68 மதிப்பீடு கொண்டிருக்க முடியும். வன்பொருள் குறிப்புகளை பொருத்தமட்டில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.

மோட்டோ ஜி5 ப்ளஸ்
ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி, 4ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, 3080எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்க கூடும் உடன் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கமாக இருக்கும் என்று இக்கருவிகளின் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சியோமி மி 6
க்வால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஆன ஸ்னாப்டிராகன் 835 கொண்டு ஐயனாகும் இரண்டாவது மாதிரியான இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மி 5 அக்கருவி முதலில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2016-ல் தான் அறிமுகமானது அதே போல மி 6 கருவியும் பார்சிலோனாவில் தான் அறிமுகம் செய்ய அதிக சாத்தியம் உண்டு.

எல்ஜி ஜி6
ஒரு 5.7-அங்குல (2880 x 1440) க்வாட் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே காட்சி கொண்டு ஒரு சூப்பர் கூர்மையான மற்றும் "அதிவேக அனுபவத்தை" வழங்கும் 564பிபிஐ பிக்சல் அடர்த்தி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி 18:9 என்ற திரை விகிதத்தில் வெளிவரும் முதல் கருவியாக இருக்கும்.

ஹூவாய் பி10
சீன நிறுவனத்தின் புதிய தலைமை கருவியான இது சார்ந்த கசிவுகளின் அடிப்படையில் ஒரு 5.5 அங்குல எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட வளைந்த டிஸ்ப்ளே உடன் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டு ஆண்ட்ராய்டு நௌவ்கட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய் பி10 பற்றிய மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இதில் சந்தேகத்திற்கு இடமின்றி அருமையான இமேஜிங் திறன்கள் அதாவது ஒரு இரட்டை 12எம்பி பின்புற கேமரா அமைப்பு மற்றும் ஒரு 8எம்பி முன் கேமரா கொண்டுருக்கும்.

மேலும் படிக்க
2017-ல் வெளியாகவுள்ள நோக்கியாவின் அசத்தல் மாடல் ஸ்மார்ட்போன்கள்


Click it and Unblock the Notifications