ரூ.25000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.! பட்டியல் இதோ.!

|

சிறந்த சிப்செட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருக்கும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் அந்த சாதனத்தில் இருக்கும். குறிப்பாக சீன நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

அதுவும் விவோ,ஒப்போ, ஒன்பிளஸ்,

அதுவும் விவோ,ஒப்போ, ஒன்பிளஸ், ரெட்மி போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது ரூ.25000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம்,
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி, OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4500 எம்ஏஎச் பேட்டரி, 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.1 கோடி பரிசுப்பே: பக்கா மாஸ் காட்டும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா- புகுந்து விளையாடுங்க!ரூ.1 கோடி பரிசுப்பே: பக்கா மாஸ் காட்டும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா- புகுந்து விளையாடுங்க!

iQOO Z3 5G ஸ்மார்ட்போன்

iQOO Z3 5G ஸ்மார்ட்போன்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட iQOO Z3 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,990-ஆக உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி
டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது.மேலும் iQOO Z3 5G மாடலில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், . குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ், 4400 எம்ஏஎச் பேட்டரி, 55 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

iQOO Z3 5G ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று பின்புற கேமரா இருக்கிறது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதிஇருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உளளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 6.6-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 ஆதரவு, 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமராவுடன்வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமர கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 5160 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல்.


போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி Sony IMX582 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்பு வசதிக்கு என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

 சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி

6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,999-ஆக உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் எச்டி + சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த சாதனத்தின் பின்புறம் பிரைமரி கேமரா சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது. மேலுமமுன்பக்கத்தில் 20 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி மாடல்.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones Available In India For Under Rs 25,000! Here is the list!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X