ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

By Super
|
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வாய்ப்பு.

அந்த வகையில் சூப்பர் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்க இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஒரு மோகம் இருக்கத்தான செய்கிறது.

அந்த வகையில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியினையும் பெற முடியும். இதில் 4.2 இஞ்ச் எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட திரையும் உள்ளது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்ய 1,500 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.

இந்த சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்ஸ்மார்ட்போன் ரூ.26,900 விலை கொண்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.18,990 விலையில் பெற முடியும்.

குறைந்த காலத்தலேயே மக்களின் நம்பிக்கையை பெற்ற எச்டிசி ஸ்மார்ட்போனை, குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஓர் சிறப்பான வாய்ப்பு உள்ளது.

எச்டிசி இன்கிரெடிபில் எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை டச் ஸ்கிரீன் எஸ்எல்சிடி திரையுடன், கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஐசிஎஸ் அப்டேஷனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நொடிக்கு 30 ஃபிரேம்களை வழங்கும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் ரூ.28,900 விலை கொண்டது. இத்தகைய ஸ்மார்ட்போனை ரூ.18,500 விலையில் சஹோலிக்.காம் அல்லது பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெற முடியும்.

சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனும் சிறந்த ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் தான். 3.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்களை பறிக்கும் அழகிய புகைப்படத்தினை வழங்கும். ரூ.18,995 விலை கொண்ட இந்த சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.12,990 விலையில் கிடைக்கும்.

அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த எச்டிசி டிஸையர் எஸ் ஸ்மார்ட்போனை இப்போது குறைந்த விலையில் பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்கிரேட் வசதியினை வழங்கும். ரூ.25,490 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன், சஹோலிக்.காம் ஆன்லைனில் ரூ.15,990 கிடைக்கும்.

மக்களிடையே சிறந்த பிரசித்தி பெற்றது நோக்கியா ஸ்மார்ட்போன்கள். இதில் என்-8 என்ற இந்த ஸ்மார்ட்போன் 3.5 தொடுதிரை வசதி கொண்டது. சிம்பையன் பெல் அப்டேஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,259 விலையில் பெறலாம். இதே என்-8 ஸ்மார்ட்போனை ரூ.16,500 விலையில் சுலேகா.காம் மற்றும் பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X