Home
Mobile

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

'ஆன்ட்ராய்டு' - கோடிக்கணக்கான உதடுகள் நாள்தோறும் முனுமுனுக்கும் 'இலவச' வார்த்தை. நாங்கள் ஏற்கெனவே ஆன்ட்ராய்டு போன்கள் பற்றியும், இயங்குதளத்தை பற்றியும் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஆன்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவதும், ஆன்ட்ராய்டு போனை வாங்க உத்தேசிப்பதும் மிகவும் சாதாரணமாகிவிட்ட நிலையில் புதிதாக அதிர்ச்சி வெடியை பற்றவைத்தார் ஒரு வல்லுநர்.

அதாவது, குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு போன்களை வாங்கவே கூடாது என்பதே அந்த மனிதரின் ஆதங்கம். ஏன் என்பதை விரிவாக நாங்கள் வழங்கியுள்ளோம்.

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

இந்த குறைந்த விலையில் கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்களில், இதன் தொடுதிரையின் தரமானது மிக மிக குறைவே!

விரைவில் வீணாய்ப்போய்விடும். சில நேரங்களில் சரியாகவே வேலை செய்யாது. இதனால் நமக்கும் எரிச்சல் தான் மிஞ்சும்.

ஆன்ட்ராய்டு போன்கள் மீதான மதிப்பும் குறைந்துவிடும்.

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

இவ்வாறான குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு போன்கள் சந்தைப்படுத்தப்படும் பொழுது, வியாபார நோக்கங்களுக்காக குறைவான செயல்திறனுடைய ப்ராசெசர்கள் கொண்டே வெளியிடுவார்கள்.

எனவே இந்த போன்களை நீங்கள் பயன்படுத்தும்பொழுது, உங்களுடைய போனுக்கு தூக்கம் வந்துவிடும்.

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

குறைந்த விலை ஆன்ட்ராய்டு போன்கள், தரமென்பதே துளிகூட இல்லாத பொருட்களைக்கொண்டே வடிவமைக்கிறார்கள்.

உங்களுடைய கவனமானது துளி மாறினாலும், ஆன்ட்ராய்டு போனானது அம்பேல்!

எளிதில் உடைந்துவிடும் வகையிலேயே இவ்வாறான போன்கள் இருக்கும்.

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு போன்களை அப்டேட் செய்வது கடினமே! சில போன்களில் இந்த அப்டேட் செய்யும் வசதியே இருக்காது.

ஆன்ட்ராய்டு போன்களை அப்டேட் செய்யவில்லையென்றால் புதிய வசதிகளை அனுபவிக்க முடியாது.

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

ஏன் குறைந்த விலை 'ஆன்ட்ராய்டு' போன்களை வாங்கக்கூடாது?

நீங்கள் இந்த குறைந்த விலை ஆன்ட்ராய்டு போனை ஏர்செல், ஏர்டெல் மற்றும் வேறேதாவது நிறுவனம் சார்ந்து வாங்கிவிட்டால், கதை முடிந்தது.

அவர்கள் விற்பனை செய்யும்பொழுது, குறைவான விலைக்கு தருவார்கள். அப்டேட் செய்யவேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் தனியாக பணம் வசூலிப்பார்கள்.

எனவே ஜாக்கிரதை!

More Pictures Galley

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X