Home
Mobile

Poco F4 5G பிடிக்கலையா? அப்போ இந்த டாப் 5 போன்களை பாருங்க.. உங்களுக்கு பிடிக்கும்.!

போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G) மாடலில் உள்ள பேட்டரி மற்றும் கேமரா செட்டப் ஆனது, "அவ்ளோ சூப்பரா ஒன்றும் இல்லை" என்கிற விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் சிப்செட் மற்றும் டிஸ்பிளேவை பொறுத்தவரை, "தரமாக இருப்பதாக" ஒரு பேச்சு!

போக்கோ எஃப்4 5ஜி

போக்கோ எஃப்4 5ஜி

குறிப்பாக இப்போது போக்கோ எஃப்4 5ஜி போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை முதலில் பார்ப்போம். அதாவது 6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன்.

போக்கோ எஃப்4 5ஜி மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற அம்சங்களும் உள்ளன. அதேபோல் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எஃப்4 5ஜி.

போக்கோ எஃப்4 5ஜி  கேமரா

போக்கோ எஃப்4 5ஜி கேமரா

போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பு கூறியது போல் இதன் கேமரா வசதி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பின்பு 20எம்பி செல்பீ
கேமராவுடன் வெளிவந்துள்ளது புதிய போக்கோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த புதிய போக்கோ போனின் ஆரம்ப விலை ரூ.27,999-ஆக உள்ளது. மேலும் இந்த புதிய போக்கோ மாடலை வாங்க விருப்பம் இல்லையென்றால், கிட்டத்தட்ட இதே விலையில் அருமையான அம்சங்களை கொண்ட 5 மொபைல் போன்கள் உள்ளன, அதில் ஒன்றை தேர்வு
செய்யுங்கள்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்53 5ஜி போனின் விலை ரூ.26,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.28,499-ஆகஉள்ளது. அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக 1080×2400 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல ஆதரவுகள்இதில் உள்ளன.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அருமையான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது சாம்சங் போன். மேலும் மீடியாடெக் Dimensity 900 சிப்செட்
உடன் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி மாடல். எனவே இந்த ஆப்ஸ்களை பயன்படுத்த மிக அருமையாகஇருக்கும்.

தரமான கேமரா

தரமான கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 108 பிரைமரி சென்சார் (f/1.8 aperture) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமராக்கள் அமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்53 5ஜி போன்.

போக்கோ எஃப்4 5ஜி போனை விட தரமான அம்சங்களை கொண்டு கேலக்ஸி எம்53 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இதை நம்பி வாங்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2

ஒன்பிளஸ் நோர்ட் 2

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.27,999-ஆக உள்ளது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன.6.4-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த
அசத்தலான ஸ்மாரட்போன்.

இந்த ஒன்பிளஸ் போனில் மீடியாடெக் Dimensity 1200 ஏஐ சிப்செட் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், டூயல்ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4500 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி, 65W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட தரமான அம்சங்கள் உள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 2 கேமரா எப்படி?

ஒன்பிளஸ் நோர்ட் 2 கேமரா எப்படி?

இந்த ஒன்பிளஸ் போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சியோமி போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி போன்.

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி கேமரா வசதி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி கேமரா வசதி

சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் 5ஜி போன் 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைகொண்டுள்ளது. இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியம். அதேபோல் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி போன்.

அதேபோல் Dolby Atmos மற்றும் Hi-Res ஆடியோ ஆதரவுடன் JBL-டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. குறிப்பாக ஆக்டோ-கோர்மீடியாடெக் Dimensity 920 சிப்செட்-ஐ கொண்டுள்ளது இந்தி சியோமி போன். எனவே போக்கோ எஃப்4 5ஜி மாடலை விட இதை வாங்குவதுநல்லது.

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. இந்த ரியல்மி போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, 20:9 ரேஷியோ, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் இந்த போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைகொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி பேட்டரி வசதி

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி பேட்டரி வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 60W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். எனவே விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மீடியடெக் Dimensity 920 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி.

iQOO Neo 6 போன்

iQOO Neo 6 போன்

8ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 6 போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த மாடல் 6.62-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற தரமான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த iQOO போன்.

அதேபோல் இந்த போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

iQOO Neo 6 சிப்செட் வசதி

iQOO Neo 6 சிப்செட் வசதி

iQOO Neo 6 போனில் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4700 எம்ஏஎச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Top 5 phones available to Alternatives the Poco F4 5G phone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X