Home
Mobile

ரூ.15,000-க்குள் கிடைக்கும் டாப் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

ரியல்மி முதல் சாம்சங் வரை பல நிறுவனங்கள் இப்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை கூட அறிமுகம் செய்கின்றன.

இப்போது விஷயத்துக்கு

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று
விரிவாகப் பார்ப்போம்.

5.டெக்னோ கேமன் 19 நியோ

5.டெக்னோ கேமன் 19 நியோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ கேமன் 19 நியோ போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க
முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராஸசர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன். எனவேபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 19 நியோ போன்.

 டெக்னோ கேமன் 19 நியோ கேமரா

டெக்னோ கேமன் 19 நியோ கேமரா

டெக்னோ கேமன் 19 போன் ஆனது 48எம்பி கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன்.

 4.ரியல்மி சி35

4.ரியல்மி சி35

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,194 விலையில் வாங்க முடியும்.
இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் Unisoc Tiger T616 பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

3.ரெட்மி நோட் 11டி 5ஜி

3.ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 ஆக்டோ-கோர் 5ஜி பிராசஸர், 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானரெட்மி ஸ்மார்ட்போன்.

இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே போன்ற தரமான அம்சங்களை கொண்டுவெளிவந்துள்ளது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்.

2.ஒப்போ ஏ74 5ஜி

2.ஒப்போ ஏ74 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990-ஆக உள்ளது. பின்பு இந்த ஒப்போ போன் 6.49-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2400x1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுவெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ74 5ஜி 48எம்பி ஏஐ ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

 1.சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

1.சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-inch ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தசாம்சங் 5ஜி போன். அதேபோல் இந்த போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுவெளிவந்துள்ளதுசாம்சங் 5ஜி போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, 15w பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த 5ஜி போன். மேலும் அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 New Smartphones Under Rs 15,000: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X