Home
Mobile

யாரு விடுவா? கம்மி பட்ஜெட்ல Lava 5ஜி போன்கள்.. சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. இதோ பட்டியல்..

லாவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லாவா 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது.

யாரு விடுவா? கம்மி பட்ஜெட்ல Lava 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

64எம்பி சோனி ஐஎம்எக்ஸ்682 பிரைமரி கேமரா + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன். மேலும் இந்த போனில் 13எம்பி செல்பி கேமரா, IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 64எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த லாவா போல்டு 5ஜி போனில் உள்ளன.

யாரு விடுவா? கம்மி பட்ஜெட்ல Lava 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் இந்த போனில் 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதி உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டுஉள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

50 எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், . சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint), 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனில் உள்ளன.

யாரு விடுவா? கம்மி பட்ஜெட்ல Lava 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே, 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, ஆக்டா கோர் யுனிசோக் டி765 சிப்செட் (Octa Core UNISOC T765) சிப்செட், 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டப் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 50எம்பி சோனி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 SoC) சிப்செட், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Lava 5G phones available at low budget prices in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X