கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடல்களில் உள்ள 5 சிறப்பம்சங்கள்

By Siva
|

கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடலை நியூயார்க்கில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடல்களில் உள்ள 5 சிறப்பம்சங்கள்

இதற்கு முந்தைய மாடலான S7 மாடலை விட அனைத்து விதங்களிலும் சிறந்து விளங்கி வரும் இந்த மாடல் நிச்சயம் ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதுதான் இதன் சிறப்பு. குறிப்பாக பிக்ஸ்பி, DeX டெக்ஸ்டாப் டாக் உள்பட பல வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய ஐந்து வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்

வாய்ஸ் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பி:

வாய்ஸ் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பி:

ஆப்பிள் நிறுவனத்தின் சிறி, கூகுள் நிறுவனத்தின் கூகுள் நெள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்டானா போல சாம்சங் நிறுவனத்தின் சொந்த டெக்னாலஜியில் அமைந்தது தான் இந்த பிக்ஸ்பி என்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட்.

மிக புத்திசாலித்தனமாக பயனாளிகளுக்கு உதவும் இந்த பிக்ஸ்பி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பிக்ஸ்பி பட்டன் மூலம் சாம்சங் S8 பயனாளிகள் பிக்ஸ்பி உதவியுடன் ஆப்ஸ்களை செயல்படுத்துவது, டெக்ஸ்ட் மூலம் உத்தரவிடுவது, என நமது பர்சனல் அசிஸ்டெண்ட் போலவே பக்காவாக செயல்படும்.

தற்போதைக்கு சாம்சங் நிறுவனத்தின் சொந்த ஆப்ஸ்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் உள்ள இந்த பிக்ஸ்பி மிக விரைவில் அனைத்து ஆப்ஸ்களையும் செயல்படுத்த வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் DeX

சாம்சங் DeX

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காண்டினியம் போன்றே, சாம்சாங் DeX உங்களது ஸ்மார்ட்போனை கணிணியுடன் இணைத்து பயன்படுத்த வழிவகை செய்கிறது.

இந்த வசதியை கொண்டு ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள், டாக்குமென்ட்களை எடிட் செய்வது, வீடியோக்களை பார்த்து ரசிப்பது உள்பட பல்வேறு சேவைகளை டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில், கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்தலாம்.

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான 13எம்பி கேம் போன்கள்.!

சாம்சங் ஃபோர்ட் நாக்ஸ் (Fort Knox)

சாம்சங் ஃபோர்ட் நாக்ஸ் (Fort Knox)

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடலில் உள்ள டேட்டா பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதுதான் இந்த சாம்சங் ஃபோர்ட் நாக்ஸ். டேட்டா கசிவை பலமாக எதிர்த்து போராடும் இந்த வசதியால் நமது டேட்டாக்கள் இரும்புப் பெட்டியில் இருப்பது போன்ற பாதுகாப்புக்கு சமம்.

ஏற்கனவே கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடல்களில் பயோமெட்ரிக் டெக்னாலஜிகளான பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், கண்விழி ஸ்கேனர், முக அமைப்பு ஆகிய பாதுகாப்பும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் பிக்சல் டெக்னாலஜி:

டூயல் பிக்சல் டெக்னாலஜி:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் மாடல்களில் 12 MP டூயல் பிக்சல் டெக்னாலஜியுடன் OIS உள்ளது. அதுமட்டுமின்றி 8 MP ஆட்டோபோகஸ் செல்பி கேமிராவும் உள்ளது.

டூயல் பிக்சல் டெக்னாலஜி வசதி இருப்பதால் அகலமான புகைப்படங்களை குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாக எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் முக அங்கீகார டெக்னாலஜி மூலம் செல்பி புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்கலாம்

சாம்சங் கனெக்ட்

சாம்சங் கனெக்ட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் சாம்சங் கனெக்ட் என்ற ஆப்ஸ் இன்ஸ்டால் ஆகியுள்ளது. இந்த வசதி மூலம் நமது வீட்டில் உள்ள சில உபகரணங்களை ஒருங்கிணைக்கவு, பல விஷயங்களை மேம்படுத்தவும் டிராக் செய்யவும் உதவுகிறது.

மேலும் மிக விரைவில் சாம்சங் கனெக்ட் பிற நிறுவனங்களின் உபகரணங்களையும் மேம்படுத்தும் வசதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Last month, Samsung has launched its much-expected flagship smartphone at an unpacked event in New York.The successor of the Galaxy S7 series this time comes with an overhaul in design, which is definitely the comprehensive update over its predecessor.Apart from this, the mobile also offers lots of features including other features including Bixby, DeX desktop dock and more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X