2012ன் தலைசிறந்த கேமராக்களைக் கொண்ட முதல் 5 ஸ்மார்ட்போன்கள்

By Karthikeyan
|
2012ன் தலைசிறந்த கேமராக்களைக் கொண்ட முதல் 5 ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும் ஏராளமான டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப் கணினிகள் போன்றவை சந்தைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவற்றில் சிறந்த கேமராவைக் கொண்டிருக்கும் தலைசிறந்த 5 ஸ்மார்ட்போன்களை இந்த கட்டுரை வரிசைப்படுத்துகிறது.

இந்த வகையில் முதலிடத்தில் இருப்பது எச்டியின் ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் பெற காத்திருக்கும் இந்த போன், ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்பக்க கேமராவைக் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் ஆட் ஆன்ஸ் சாப்ட்வேர் சூப்பராக இருக்கிறது. மேலும் இந்த கேமரா ஸ்லோ மோசன் வீடியோ பதிவையும் சப்போர்ட் செய்கிறது. இந்த கேமரா எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

இரண்டாவது இடத்தில் இருப்பது சோனியின் எக்ஸ்பீரியா எஸ்எல் ஆகும். 12.1எம்பி எக்ஸ்மர் சென்சாரைக் கொண்டிருக்கும் இதன் கேமரா மற்ற டிஜிட்டல் கேமராக்கள் கொண்டிருக்கும் திறனைக் கொண்டுள்ளது. இருட்டிலும் மிகத் துல்லியமான போட்டோக்களை இந்த கேமரா எடுக்கும். மேலும் இந்த கேமரா 3டி ஸ்வீப் பனோரமா, ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமரா 1080பி வீடியோவையும் ரிக்கார்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

வரிசையில் அடுத்ததாக வருவது ஐபோன் 5 என்று சொல்லலாம். இந்த ஐபோன் 5 பின்பக்கம் ஒரு 8எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் இல்லுமினேட்டட் சென்சார், உயர் ரக ஐஆர் பில்டர் மற்றும் எப்/2.4 அபர்சர் போன்றவை உள்ளன. அதோடு இந்த கேமராவில் பனோரமா ஷாட்டுகளை எடுக்க முடியும். அதோடு இதில் கிரிஸ்டல் லென்ஸ் உள்ளதால் குறைந்த வெளிச்சத்திலும் மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும்.

நோக்கியாவின் லூமியா 920 நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த போனில் ஒரு சூப்பரான கேமரா உள்ளது. இந்த கேமராவில் 8எம்பி சென்சார், 28மிமீ கார்ல் செய்ஸ் லென்ஸ் மற்றும் எப்/2.2 அபர்சர் போன்ற வசதிகள் உள்ளன. அதனால் இருட்டிலும் இந்த கேமரா சூப்பரான படங்களை எடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது.

இறுதியாக நோக்கியாவின் பியூர்வீயூவ் 808 ஸ்மார்ட்போனைச் சொல்லலாம். 41எம்பி சென்சார் மற்றும் கார்ஸ் செய்ஸ் கொண்ட இந்த கேமரா அற்புதமான போட்டோக்களை எடுக்கும் சக்தி கொண்டது. ஆனாலும் இது டிஎஸ்எல்ஆர் கேமரா அளவிற்கு வர இயலாது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X