ஐபோன் முதல் விவோ வரை: 8K வீடியோ ரெக்கார்டிங்.. டாப் 5 கேமரா போன்கள் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க..
இந்தியாவில் தரமான கேமரா போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தரமான கேமரா (camera) அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்கின்றன. அதவும் ( filmmaker), யூடியூபர், vlogger, இன்ஸ்டாகிராம் கிரியேட்டர் என அனைவரும் முன்னணி நிறுவனங்களின் தரமான கேமரா போன்களை தான் பயன்படுத்துகின்றனர்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் வாங்க கிடைக்கும் சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max): 48எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக ProRes வீடியோ ரெக்கார்டிங், சினிமாடிக் மோட் ( Cinematic mode), எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங், 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போனின் கேமராக்கள். எனவே அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த போனின் மூலம் பதிவு செய்யலாம்.
குறிப்பாக 12எம்பி செல்பி கேமராவும் கொண்டுள்ளது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். பின்பு 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளே, ஏ17 ப்ரோ சிப், 6 கோர் பிராசஸர், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஐபோன் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,79,900-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra): 200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ கேமரா +50 எம்பி பெரிஸ்கோப் (Periscope) கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 8K வீடியோ ரெக்கார்டிங், சூப்பர் ஸ்டெடி மோட் ( Super Steady mode), ஆட்டோ போகஸ் ( Auto Focus) சப்போர்ட் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.
அதேபோல் 12எம்பி செல்பி கேமராவும் இந்த சாம்சங் போனில் உள்ளது. பின்பு 6.8 குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.1,02,990 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro): AI போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபிக்கு சிறந்தது இந்த கூகுள் பிக்சல் 8 மாடலின் கேமராக்கள். அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக மேஜிக் எடிட்டர், ரியல் டோன், சூப்பர் ரெஸ் ஜூம்,பெஸ்ட் டேக்(Best Take) உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே தரமான படங்களை இந்த போனின் உதவியுடன் எடுக்க முடியும்.
அதேபோல் 10.5எம்பி செல்பி கேமராவும் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, டென்சர் ஜி5 சிப்செட் (Tensor G5 Chipset), 5050mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்ட கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் 12 (OnePlus 12): 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது ஒன்பிளஸ் 12 போன். அதுவும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது நல்ல வெளிச்சத்தில் மட்டுமல்ல குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறப்பான போட்டோக்களை எடுக்கிறது.
மேலும் டெலிபோட்டோ கேமராவின் 3எக்ஸ் ஜூமிங் அருமையாக உள்ளது. ஷார்ப் ஆன எட்ஜ்களுடன் வைட்-ஆங்கிள் கேமராவும் கூட சிறப்பான அவுட்புட்களை வழங்குகிறது. முன்பக்கத்தில் உள்ள 32எம்பி செல்பீ கேமரா "வழக்கமான" அவுட்புட்களை வழங்குகிறது. அதேசமயம் ஹாசல்பிளாட் டியூனிங் (Hasselblad Tuning), எச்டிஆர் என்ஹான்ஸ்மெண்ட்(HDR enhancement), 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.
குறிப்பாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. மேலும் 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளே, 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 5400mAh பேட்டரி, 100W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை ரூ.59,998 விைலையில் வாங்க முடியும்.
விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro): இந்த போனின் கேமராக்களை பொறுத்தவரை, Zeiss பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் + 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50-மெகாபிக்சல் Zeiss APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. மேலும் இந்த போனின் ரியர் கேமராக்களில் சினிமாடிக் மோட், வி1 பிளஸ் சிப் ஆதரவும் உள்ளது.
எனவே விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது.
அதேபோல் 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்..
தற்போது விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.89,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான கேமரா மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளதால் நம்பி வாங்கலாம்.
photo credit: pngcore


Click it and Unblock the Notifications








