Home
Mobile

பெஸ்ட் கேமரா போன்னா இது தான்.. ரூ.15,000 விலையில் டாப் 5 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்.. எது உங்க சாய்ஸ்?

ரூ.15,000 விலைக்குள் பெஸ்ட் கேமரா போன் (Best camera smartphone) வாங்க கிடைக்குமா? கிடைக்கும் பாஸ் கிடைக்கும். 1 அல்ல 2 அல்ல மொத்தம் 5 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களின் மாடல்களை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

இந்திய சந்தையில், ரூ.15,000 விலை செக்மென்ட்டில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன. இருப்பினும், இந்த விலை பிரிவில் பெஸ்டான தலைசிறந்த கேமரா அம்சங்களை கொண்ட நம்பகமான மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். தலைசிறந்த பிராண்டுகளில் இருந்து பெஸ்டான கேமராக்களை கொண்ட போன்களுக்கு கிடைத்த நன்மதிப்பை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் கேமரா போன்னா இது தான்.. ரூ.15,000 விலை டாப் 5 பெஸ்ட் கேமரா போன்

ரூ.15,000 விலையில் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் (Top 5 Best Camera Smartphone Under Rs 15,000):

அதேபோல், மிகவும் லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த பெஸ்ட் கேமரா போன்களை மட்டுமே இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்தியாவில் ரூ.15,000 விலையில் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் எது என்பதை பார்க்கலாம்.

1. போகோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G):
இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 15,999 மட்டுமே. இது 108MP கொண்ட கேமராவுடன் வருகிறது. இந்த விலை செக்மென்ட்டில் 108MP சென்சாரை கொண்ட ஒரே மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G):
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,490 என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் கேமரா அம்சத்தை பற்றி நாம் விபரமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. காரணம், சாம்சங் பல தசபதங்களாக சிறந்த கேமரா மற்றும் டிஸ்பிளேவை வழங்கி வருகிறது. இந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP + 8MP + 2MP கொண்ட ட்ரிபிள் கேமராவை கொண்டுள்ளது.

பெஸ்ட் கேமரா போன்னா இது தான்.. ரூ.15,000 விலை டாப் 5 பெஸ்ட் கேமரா போன்

3. மோட்டோ ஜி54 (Moto G54):
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 என்கிற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் 50MP + 8MP சென்சார் கொண்ட டூயல் கேமராவுடன் வருகிறது. இந்த போனும் அட்டகாசமான டீடைல் மற்றும் கலர்களை துடிப்புடன் வழங்கும் கேமராவை கொண்டுள்ளது.

4. ஐகியூஓஓ இஜட்7s 5ஜி (iQoo Z7s 5G):
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 என்ற விலையுடன் வருகிறது. iQoo சமீபத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டாக மாறிவருகிறது. இது முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

5. ரியல்மி நர்ஸோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60 Pro 5G):
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 100MP கொண்ட OIS கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த் ஸ்மார்ட்போன் சாதனம் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த 5 ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த கேமராவை கொண்டுள்ளன. இதில் உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போன் மாடல் பிடித்திருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, உங்கள் தேர்வை இறுதியாக முடிவு செய்யுங்கள். இறுதியில், எந்த போனை உங்கள் தேர்வாக தேர்வு செய்வீர்கள் என்பதையும் கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Best Camera Smartphone with 108MP 100MP 50MP Sensors Under Rs 15000 To Buy Now in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X