2020: வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.!
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டில் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனாலும் சில நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தன. மேலும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களும் சற்று குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டன.

குறிப்பாக இந்த ஆண்டு ரியல்மி, ரெட்மி உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான பட்ஜெட் விலையில் அற்புதனமான ஸ்மார்ட்போன்களை கொண்டுவந்தன. அதன்படி இந்த அறிமுகம் செய்யப்பட்ட டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மி Narzo 20A
இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Narzo 20A அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி Narzo 20A மாடலின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

ரெட்மி 9 பிரைம்
ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் ஒரு தரமான ஸ்மார்ட்போன் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் அந்நிறுவனம் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் 6.53-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட், 13எம்பி ரியர் கேமரா, 5020 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

போக்கோ சி3
போக்கோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி கொண்ட போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

மோட்டோரோலா இ 7 பிளஸ்
மோட்டோரோலா இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா மற்றும் மென்பொருள் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. அதன்படி 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் 10 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா இ 7 பிளஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

ரியல்மி சி11
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல் எச்டி+ ரெசல்யூஷன் வசதியோடு வருகிறது. மீடியா டெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. ரியல்மி சி 11 இரட்டை பின்புறகேமரா அமைப்பு உள்ளது. பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதியும், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா வசதியும் இதில் உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது.
ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ இல் இயங்குகிறது. ரியல்மி சி 11, 5,000 எம்ஏஎச் பெரிய பேட்டரியுடன் வருகிறது. இதுவரை வெளியிடப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி வசதியை வழங்கும் சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது


Click it and Unblock the Notifications