Just In
- 42 min ago
ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
- 59 min ago
3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
- 15 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 16 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Movies
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020: இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 பீச்சர் போன் மாடல்கள்.!
இன்னும் பல இடங்களில் பீச்சர் போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக இப்போது வரும் ஒரு சில பீச்சர் போன்களில் பேஸ்புக் உட்பட பல்வேறு வசதிகள் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இதுபோன்ற பீசசர் போன்களை பாதுகாப்பாக அதிக வருடங்கள் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களை விட ஆஃப்லைன் ஸ்டோர்களில் தான் இதுபோன்ற பீச்சர் போன் மாடல்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் ஆன்லைன் தளங்களில் அசத்தலான பீச்சர் போன் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 பீச்சர் போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நோக்கியா 5310
நோக்கியா 5310 பீச்சர் போன் மாடல் டூயல் சிம் வசதி, எம்பி3 பிளேயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் முன்பு இரண்டு ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நோக்கியா 5310 பீச்சர் போன் மாடல் 1200 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. எனவே அதிக நாட்கள் பேட்டரி பேக்அப் கிடைக்கும். பின்பு 2.4-இன்ச் டிஸ்பிளே, புளூடூத் வசதி, எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். அமேசான் வலைத்தளத்தில் ரூ.3,495-விலையில் இந்த நோக்கியா 5310 பீச்சர் போன் மாடலை வாங்க முடியும்.

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்741
மைக்ரோமேக்ஸ் எக்ஸ்746 சாதனம் ஆனது 0.3எம்பி ரியர் கேமரா வசதி, 2.4-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 32எம்பி ரேம் மற்றும் 32எம்பி மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 1700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மைக்ரோமேக்ஸ் எக்ஸ்741 சாதனம். டூயல் சிம் ஆதரவு கொண்ட இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ்741 சாதனத்தின் விலை ரூ.1,289-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது.

லாவா மிகவும் பிரபலமான ஃபிளிப் டிசைனுடன் அதன் லேட்டஸ்ட் பீச்சர் போன் மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.1650-ஆக உள்ளது. மேலும் லாவா ஃபிளிப் போன் ஆனது 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்பனேட் பாடி மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சுவாரசியமாக இந்த லாவா ஃபிளிப் போன் டூயல் சிம்-ஐ ஆதரிக்கிறது மற்றும் சூப்பர் பேட்டரி பயன்முறை கொண்ட 1200 எம்ஏஎச் லி-அயன் பேட்டரியுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூன்று நாட்கள் வரை ஆயுளை வழங்கும். இந்த போனில் விஜிஏ கேமரா, மேலே பிளிங்க் கால் நோட்டிப்பிகேஷன் எல்இடி மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டிங் போன்ற அம்சங்களும் உள்ளது.
இந்த போன் 22 மொழிகளில் உள்வரும் டெக்ஸ்ட்களை ஆதரிக்கும். மேலும் பயனர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட ஏழு மொழிகளில் டைப் செய்ய உதவுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில்
வாங்க முடியும்.

சாம்சங் மெட்ரோ 313
சாம்சங் மெட்ரோ 313 சாதனம் ஆனது 0.3எம்பி பிரைமரி கேமரா, 2-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே, 1280 x 720 பிக்சல் தீர்மானம் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 16எம்பி ரேம் மற்றும் 16எம்பி மெமரி வசதி இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக டூயல் சிம் ஆதரவு, 1000 எம்ஏஎச் பேட்டரி, புளூடூத், இரட்டை சிம், எஃப்எம் ரேடியோ, வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அமேசான் வலைத்தளத்தில் இந்த சாதனத்தை ரூ.2,129-விலையில் வாங்க முடியும்.

கார்பன் கே 888 மெட்டல்
கார்பன் கே 888 மெட்டல் எனும் பீச்சர் போன் மாடல் 3000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 2.8-இன்ச் டிஸ்பிளே, 0.3எம்பி ரியர் கேமரா, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.1599-ஆக உள்ளது. பின்பு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190