Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 "மாற்று" ஸ்மார்ட்போன்கள்!

|

எக்கச்சக்கமான பில்ட்-அப்களுக்கு மத்தியில் வெளியான நத்திங் போன் 1 (Nothing Phone 1) ஆனது எதிர்பார்த்தபடி "ஆஹா ஒஹோ" என்று இல்லையென்றாலும் கூட, கலவையான விமர்சங்களை பெற்று வருவது நத்திங் நிறுவனத்திற்கு சற்றே ஆறுதல் அளிக்கலாம்.

நத்திங் போன் 1-ஐ யாரெல்லாம் வாங்குவார்கள்?

நத்திங் போன் 1-ஐ யாரெல்லாம் வாங்குவார்கள்?

ஸ்டைலான மற்றும் தனித்துவமான வடிவமைப்பு, க்ளீன் ஆன சாஃப்ட்வேர், நல்ல கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை முன்வைத்து யார் வேண்டுமானாலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!

இதை யாரெல்லாம் வாங்கவே மாட்டார்கள்?

இதை யாரெல்லாம் வாங்கவே மாட்டார்கள்?

இது சார்ஜர் உடன் வரவில்லை என்பதாலும், 33W என்பது அவ்வளவு வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் இல்லை என்பதாலும், இதன் டிஸ்பிளேவின் பீக் ப்ரைட்னஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதாலும், இதன் Facial recognition அம்சமானது மிகவும் நுட்பமாக செயல்படவில்லை என்பதாலும் - யார் வேண்டுமானாலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் புறக்கணிக்கலாம்.

"ஆள விடுடா சாமி!" என்று எஸ்கேப் ஆனவரா நீங்க?

ஒருவேளை நத்திங் போன் 1-ஐ புறக்கணித்தவர்கள் பட்டியலில் நீங்களும் இருந்தால், இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் எல்இடி லைட்ஸ் உட்பட எந்தவொரு அம்சத்தையும் நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய 5 பெஸ்ட் ஆல்டர்நேட்டிவ் (அதாவது மாற்று) ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

Nothing-இன் தில்லாலங்கடி வேலை! Nothing-இன் தில்லாலங்கடி வேலை! "இதெல்லாம்" வேணுமா? அப்போ எக்ஸ்ட்ரா காசு கொடு!

05. மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30)

05. மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30)

மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது நத்திங் போனின் (1)-இன் "நெருங்கிய" போட்டியாளர்களில் ஒன்றாகும். ஏனெனில் இது நத்திங் போன் 1 பயன்படுத்தும் அதே Qualcomm Snapdragon 778G+ சிப்செட்டை தான் பேக் செய்கிறது. ஆனால் இது அட்ரெனோ 642L GPU உடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.29,999 க்கும் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

மோட்டோரோலா எட்ஜ் 30-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.55-இன்ச் ஃபுல் எச்டி+ poOLED டிஸ்ப்ளே (இந்த பட்டியலில் வேறு எந்த மொபைலிலும் இந்த அளவிலான ரெஃப்ரெஷ் ரோட்டை வழங்கவில்லை)
- OIS ஆதரவுடன் 50MP மெயின் கேமரா + 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2MP மேக்ரோ சென்சார்
- 32எம்பி செல்பீ கேமரா
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,020mAh பேட்டரி

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

04. போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G)

04. போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G)

"குறைத்து மதிப்பிடப்பட்ட" டிசைன், பின்புறத்தில் வெல்வெட் ஃபினிஷ் மற்றும் பிரமிக்க வைக்கும் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் நத்திங் போன் 1-ஐ தூக்கி சாப்பிடும் அடுத்த ஸ்மார்ட்போன் - போக்கோ எஃப்4 5ஜி ஆகும். இது மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது:

6GB + 128GB - ரூ.27,999
8GB + 128GB - ரூ.29,999
12GB + 256GB - ரூ33,999

போக்கோ எஃப்4 5ஜி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

போக்கோ எஃப்4 5ஜி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ E4 AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- டால்பி விஷன் சப்போர்ட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- அட்ரெனோ 650 GPU உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸர்
- OIS ஆதரவுடன் 64MP மெயின் கேமரா
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி
- டால்பி அட்மோஸ் மற்றும் Hi-Res ஆடியோவை வழங்கும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

03. ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6)

03. ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6)

நீங்கள் ஒரு கேமிங் விரும்பி என்றால் ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் - இந்த பட்டியலில் - உங்களுக்கான முதன்மை தேர்வாகும்!

இதன் பேஸிக் 8GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.29,999 க்கும், ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12GB + 256GB ஆனது ரூ.33,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. iQOO Neo 6 ஸ்மார்ட்போனை நீங்கள் Amazon வழியாக சொந்தமாக்கி கொள்ளலாம்.

ஐக்யூ நியோ 6-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

ஐக்யூ நியோ 6-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.62-இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- அட்ரெனோ 650 GPU உடனான ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸர்
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FunTouch OS 12
- 64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 16MP செல்பீ கேமரா
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரி

ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?

02. சாம்சங் கேலக்சி ஏ53 5ஜி (Samsung Galaxy A53 5G)

02. சாம்சங் கேலக்சி ஏ53 5ஜி (Samsung Galaxy A53 5G)

சாம்சங் Galaxy A53 5G ஆனது ரூ.35,000 என்கிற விலையில் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல "சமநிலையான" ஸ்மார்ட்போன் ஆகும். தரமான டிஸ்பிளே, வலுவான மெயின் கேமராவை பேக் செய்யும் இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வருகிறது:

6GB + 128GB - ரூ.34,999
8GB + 128GB - ரூ. ரூ.35,999

இந்த ஸ்மார்ட்போன் Amazon, Samsung இணையதளம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற முக்கிய ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்சி ஏ53 5ஜி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

சாம்சங் கேலக்சி ஏ53 5ஜி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.5-இன்ச் ஃபுல் எச்டி+ sAMOLED டிஸ்ப்ளே
- கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 5 லேயர்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான OneUI 4.1 (அவுட் ஆப் பாக்ஸ்)
- எல்இடி ஃபிளாஷ் உடனான குவாட்-ரியர் கேமரா செட்டப்
- 64MP மெயின் கேமரா (OIS) + 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5MP மேக்ரோ லென்ஸ் + 5MP டெப்த் சென்சார்
- 32MP செல்பீ கேமரா
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி

01. ஒன்பிளஸ் நோர்ட் 2டி (OnePlus Nord 2T)

01. ஒன்பிளஸ் நோர்ட் 2டி (OnePlus Nord 2T)

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 2T ஆனது நத்திங் போன் 1-க்கு மிக முக்கியமான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் Nothing Phone (1) உடன் ஒப்பிடும்போது Nord 2T சற்றே மலிவான விலையில் கிடைக்கிறது.

இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கும், 12GB + 256GB வேரியண்ட் ஆனது ரூ.33,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் Amazon மற்றும் OnePlus India e-store வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

ஒன்பிளஸ் நோர்ட் 2டி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் 2டி-இல் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- 6.62-இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS 12.1
- மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்
- 12ஜிபி LPDDR4x ரேம்
- 256ஜிபி UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50MP சோனி IMX766 ட்ரிபிள் கேமரா செட்டப்
- 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி

இந்த பட்டியலில், நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போன் 'மிஸ்' ஆகி இருந்தால், அதை கமெண்ட் வழியாக எங்களுக்கு தெரிவிக்கவும்.

Best Mobiles in India

English summary
Top 5 Best Alternatives of Nothing Phone 1 That You Can Consider and Buy in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X