அவசரப்பட்டு.. புதுசா அறிமுகமான Redmi Note 11SE-ஐ வாங்கிடாதீங்க! ஏன்னா?

|

இந்தியாவில் ரூ.13,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள Redmi Note 11SE ஸ்மார்ட்போன் ஆனது, உங்களை ஈர்க்கவில்லை என்றால்..? அது விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்கவில்லை என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில்..?

அல்லது "என்னோட பட்ஜெட் ரூ.15,000 தான்பா ஆனாலும்.. எனக்கு ரெட்மி ஸ்மார்ட்போன் வேண்டாம், வேற பிராண்ட் தான் வேணும்!" என்று கேட்பவரா?

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனெனில், ரூ.13,499 க்கு அறிமுகமாகி வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள ரெட்மி நோட் 11எஸ்இ-யின் "டாப் 5 ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை" தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

அதாவது ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் அதே சமயம் Redmi Note 11SE ஸ்மார்ட்போனிற்கான "சரியான மாற்றுக்களை" பற்றி பார்க்க உள்ளோம்!

OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!

05. Infinix Note 12 Turbo (இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ)

05. Infinix Note 12 Turbo (இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ)

Infinix Note 12 Turbo ஆனது 1080 x 2400 ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனை வழங்கும் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ G96 அல்ட்ரா கேமிங் ப்ராசஸர், 8GB வரை ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 50MP + 2MP டெப்த் லென்ஸ் + AI லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

இது ரூ.14,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது!

04. Samsung Galaxy M32 (சாம்சங் கேலக்ஸி எம்32)

04. Samsung Galaxy M32 (சாம்சங் கேலக்ஸி எம்32)

Samsung Galaxy M32 ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.4 இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6000mAh பேட்டரி, 64MP + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP மேக்ரோ லென்ஸ் + 2MP டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப், 20MP செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ G80 SoC ப்ராசஸர், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

ரூ.14,999 க்கு அறிமுகமான Samsung Galaxy M32 ஆனது இப்போது ரூ.12,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

03. Realme 9i 5G (ரியல்மி 9ஐ 5ஜி)

03. Realme 9i 5G (ரியல்மி 9ஐ 5ஜி)

Realme 9i 5G ஆனது 6.6 இன்ச் அளவிலான 90Hz அல்ட்ரா ஸ்மூத் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 180Hz டச் சாம்ப்ளிங் ரேட், மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட், 50MP அல்ட்ரா எச்டி ப்ரைமரி லென்ஸ் + 4 செமீ மேக்ரோ சென்சார் + போர்ட்ரெய்ட் ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா, 8MP செல்பீ கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது.

இது ஸ்மார்ட்போன் ரூ.14,999 முதல் வாங்க கிடைக்கிறது.

02. Oppo K10 (ஒப்போ கே10)

02. Oppo K10 (ஒப்போ கே10)

Oppo K10 ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட், 48MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா, 33W Super VOOC சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

இது பிளிப்கார்ட்டில் ரூ.14,990 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.

2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

01. Poco M4 Pro 5G (போக்கோ எம்4 ப்ரோ 5ஜி)

01. Poco M4 Pro 5G (போக்கோ எம்4 ப்ரோ 5ஜி)

Poco M4 Pro 5G ஆனது 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு, மீடியாடெக் Dimensity 810 ஆக்டா-கோர் ப்ராசஸர், 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ், MIUI 13 ஓஎஸ், 50MP + 8MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

இது ரூ.12,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 5 Best Alternative Smartphones Under Rs 15000 For Newly Launched Redmi Note 11 SE

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X