என்ன ரங்கா ஜோக் காட்றீயா.. Nothing Phone 3 விலை.. ஷாக் ஆன கஸ்டமர்கள்.. வேறு எந்த போனை வாங்கலாம்.. 5 ஆப்ஷன்ஸ்!
வழக்கம் போல.. அதாவது நத்திங் போன் 1 (Nothing Phone 1), நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய இரண்டுமே எப்படி விலை நிர்ணயம் தொடர்பான விமர்சங்களை எதிர்கொண்டதோ அதேபோல.. நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலின் இந்திய விலையும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாகவே நத்திங் போன் 3 ஆனது ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு வரும் என்கிற தகவல் கிடைத்தது. ஆனால் "இந்தியாவில் ஏன் அது சாத்தியமில்லை?" என்று நாங்களே கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஆனால் நடந்தது என்னவோ - நத்திங் போன் 3 ரூ.80,000 - ரூ .90,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும், ஹை - எண்ட் வேரியண்ட் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விற்பனை சலுகையாக 12ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.62,999 க்கும், 16ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.72,999 க்கும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பார்த்தாலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் அதிக விலை நிர்ணயத்தையே கொண்டுள்ளது. எங்களுடைய கருத்தில் நீங்கள் உடன்பட்டால்.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு பதிலாக வேறு என்ன ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற தேடலில் நீங்கள் இருந்தால்.. இதோ டாப் 5 நத்திங் போன் 3 ஆல்டர்னேடிவ் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் (Nothing Phone 3 Alternative Smartphones) இதோ:
1. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16)
2. கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25)
4. ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
5. ஷாவ்மீ 15 (Xiaomi 15)
மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் "தற்போதைய" விலை நிர்ணயம் என்ன? பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart) ஆப்பிள் ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல பிளிப்கார்ட் வழியாக கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வழியாக ரூ. 80,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.69,997 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.64,998 க்கு அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் முன்பதிவு மற்றும் விற்பனை சலுகைகள்: நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 1, 2025 அன்று முதல் தொடங்கும் என்றும், சிறப்பு அறிமுக சலுகையாக, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் நத்திங் போன் 3 உடன் ரூ.14,999 மதிப்புள்ள நத்திங் இயர் இயர்பட்ஸ் மாடலை முற்றிலும் இலவசமாக பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் அல்லது ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








