Home
Mobile

ஆப்பிள் ஐபோன் டியோ விலை.. ஷாக் ஆன கஸ்டமர்கள்.. வேறு எந்த போனை வாங்கலாம்.. 5 ஆப்ஷன்ஸ்!

ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 7.6-இன்ச் ஒஎல்இடி இன்னர் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே மற்றும் 5.4-இன்ச் அவுட்ர் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சிக்ஸ்-கோர் ஏ20 ப்ரோ 2என்எம் சிப் (Six-Core A20 Pro 2nm chip) வசதியும் இந்த போனில் உள்ளது.

இதுதவிர IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 48எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 12எம்பி செல்பி கேமரா, சைடு-பட்டன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஃபேஸ்டைம் கேமரா, MagSafe மற்றும் 25W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல அம்சங்களுடன் ரூ.2,99,900 விலையில் ஆப்பிள் ஐபோன் டியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் டியோ போன் சற்று உயர்வான விலையில் தான் வெளியாகி உள்ளது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன. சரி இப்போது ஆப்பிள் ஐபோன் டியோ போனுக்கு மாற்றாக இருக்கும் சில மடக்கும் வகையிலான போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் டியோ விலை.. ஷாக் ஆன கஸ்டமர்கள்..

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 8 அல்ட்ரா (Samsung Galaxy Z Fold 8 Ultra)
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 கேலக்ஸி 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 Galaxy 3nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா போன் வெளியாகி உள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

8 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. அதேபோல் 6.5 இன்ச் டைனாமிக் அமோலெட் கவர் டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

200எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 10எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45W சார்ஜிங், ஐபி48 ரேட்டிங், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த மாடலில் உள்ளன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு8 அல்ட்ரா மாடலின் ஆரம்ப விலை ரூ.1,94,999-ஆக உள்ளது.

ஷாவ்மீ 18 ஃபோல்ட் (Xiaomi 18 Fold)
7.58-இன்ச் போல்டபிள் AMOLED டிஸ்பிளே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ 18 ஃபோல்ட் போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதேபோல் 5.38-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

டெகா-கோர் Xring O3 AI பிராசஸர், ஷாவ்மீ ஹைபர்ஓஎஸ் 4 (Xiaomi HyperOS 4), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 6000எம்ஏஎச் பேட்டரி, 67W வயர்டு சார்ஜிங், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஷாவ்மீ 18 ஃபோல்ட் மாடல். மேலும் 16எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த போன் சமீபத்தில் சீனாவில் 10999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,54,775) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6)
8.12-இன்ச் ஃபோல்டபிள் டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 × 2248 பிக்சல்ஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் 6.62-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த கவர் டிஸ்பிளேவில் 2616 × 1140 பிக்சல்ஸ் வசதி உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 எஸ்ஒசி (3nm octa-core Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, 80W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 16 ஒஎஸ், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், IR கண்ட்ரோல்போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஒப்போ பைண்ட் என்6 போனின் பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன மேலும் இந்த போனில் 16எம்பி செல்பி கேமராவும் உள்ளது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.1,32,755-ஆக உள்ளது.

மோட்டோரோலா ரேசர் போல்ட் (motorola razr fold)

8.1-இன்ச் 2கே எல்டிபிஒ பிஒஎல்இடி (2K LTPO pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), டால்பி விஷன், 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதேபோல் 6.56-இன்ச் எல்டிபிஒ பிஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

50எம்பி சோனி பிரைமரி கேமரா (Sony Lytia 828) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் போல்ட் போன். மேலும் 32எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.1,49,999-ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் டியோ விலை.. ஷாக் ஆன கஸ்டமர்கள்..

ஹானர் மேஜிக் வி6 (HONOR Magic V6)
7.95-இன்ச் போல்டபிள் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் 6.52-இன்ச் அவுட்டர் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியும் உள்ளது. தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட், 7150mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

50எம்பி வைடு கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஹானர் மேஜிக் வி6 மாடல். மேலும் 20எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. சீனாவில் ஹானர் மேஜிக் வி6 போனின் ஆரம்ப விலை 8999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,20,220)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Best Alternative Smartphones to Buy Instead of Apple iPhone Duo Which Launched For Rs 299900
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X