ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

|

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மக்கள் 5ஜி போன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பல செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை விற்பனை செய்ய தொடங்கிவிட்டன.

5ஜி போன்

அதேபோல் இனி 4ஜி போன்களை விட 5ஜி போன்களுக்கு தான் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கிடைக்கும் 5ஜி போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக 6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் டூயல் ஸ்டிரியோ ஸ்பிக்கர்கள், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

போனை திருடியவரின் இடத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடிச்ச சிங்கப்பெண்: க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!போனை திருடியவரின் இடத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடிச்ச சிங்கப்பெண்: க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிறட்ர்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.59-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon தசரா டீல்ஸ்: பக்கா தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்.. உடனே முந்துங்கள்!Amazon தசரா டீல்ஸ்: பக்கா தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்.. உடனே முந்துங்கள்!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த 5ஜி போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 50எம்பி கேமரா உட்பட குவாட் ரியர் கேமரா அமைப்பு, 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

 சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸி எப்23 5ஜி போனின் விலை ரூ.16,490-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் இன்னும் குறைவான விலையில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2 எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் போன். குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி, 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் போன்.

5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கிடலாமா?5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கிடலாமா?

 ரியல்மி 9 ப்ரோ 5ஜி

ரியல்மி 9 ப்ரோ 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்

6.6-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி 9 ப்ரோ 5ஜி.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Top 5 Best 5G Phones to Buy in India: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X