Home
Mobile

6ஜிபி ரேம் கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

நீங்கள் இப்போது வாங்கக்கூடிய 6ஜிபி ரேம் கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இதை உங்கள் முன் கொண்டு வருகிறோம்.

By Muthuraj

ஸ்மார்ட்போன்களின் மீது நாம் கொண்டிருக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. மறுபக்கம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் வருகை முடிவடையாமல் இருப்பதால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வளர்ந்து வரும் நிறுவனங்கள் மிகவும் சவாலான நிலைப்பாட்டை அனுதினமும் எதிர்கொள்கின்றன.

6ஜிபி ரேம் கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

ஒன்ப்ளஸ் 3 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களுக்கான போட்டி தொடங்கியது. இதன் விளைவால் 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவிற்கு திறனாய் செயல்படாது என்ற ஒரு பிராமையான எண்ணம் நம்முள் எழத்தொடங்கியது.

அது பிரமையோ அல்லது நிஜமோ - அத இரண்டாம் பபட்சம். முதலில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் அதுதான் ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மையான வேலையாகும். அப்படியாக, நீங்கள் இப்போது வாங்கக்கூடிய 6ஜிபி ரேம் கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இதை உங்கள் முன் கொண்டு வருகிறோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8+

சாம்சங் கேலக்ஸி எஸ்8+

6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி 6.2-இன்ச் குவாட் எச்டி+ டிஸ்பிளே 2960×1440 தீர்மானம் மற்றும் 529பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை இருபுறமும் கொண்டுள்ளது. இரட்டை பிக்சல் 12எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது

ஆசஸ் சென்போன் 3 டீலக்ஸ்

ஆசஸ் சென்போன் 3 டீலக்ஸ்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 டீலக்ஸ் ஒரு 5.7 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 64 ஜிபி உள் நினைவகம் கொண்ட இக்கருவி 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனமாகும்.

ஒன்ப்ளஸ் 3டி

ஒன்ப்ளஸ் 3டி

ஜூன் மாதம் தொடங்கப்பட்டது இது ரூ.27,999/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்ப்ளஸ் 3 உடன் ஒப்பிடும்போது 3டி ஒரு புதிய செயலி, பெரிய பேட்டரி, மற்றும் ஒரு மேம்பட்ட முன் கேமரா கொண்டுள்ளது. ஒரு 16எம்பி ரியர் சென்சார், ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி மற்றும் ஒரு பெரிய 3400எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை குறிப்பிட்டு கூறலாம்.

நூபியா இசெட்11

நூபியா இசெட்11

6 ஜிபி ரேம் கொண்ட இக்கருவி தற்போது அமேசான் இந்தியாவில் 28,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு க்வாட்-கோர் 2.15ஜிஹாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 சிப்செட் உடன் வருகிறது. இது இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.எப்2.4 துளை கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட இக்கருவி முன் மற்றும் பின் பக்கம் இரண்டிலும் ஒரு 16 மெகாபிக்சல் கேமரா கொண்டள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் இந்த தொலைபேசி வருகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 Android Smartphones With 6GB RAM. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X