Home
Mobile

7300mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. தவம் கிடக்க வைத்த ஸ்மார்ட்போன்கள்.. OnePlus 15 டூ iQOO 15 வரை!

இந்திய மார்கெட்டில் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கும் டாப் 4 ஸ்மார்ட்போன்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் 15 (OnePlus 15), நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite), ஐக்யூ 15 (iQOO 15), ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய மாடல்கள் இருக்கின்றன.

ஒன்பிளஸ் 15 (OnePlus 15): இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 15ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdrogon 8 Elite Gen 5) சிப்செட் மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது. பிளஸ் மைண்ட் (Plus Mind) பர்சோனல் இன்டலிஜென்ஸ் கிடைக்கிறது.

டீடெயில்மேக்ஸ் என்ஜின் (DetailMax Engine) சப்போர்ட் கொண்ட 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 7,300mAh பேட்டரி, 120W சார்ஜிங் வருகிறது. ரூ.70,000 பட்ஜெட்டில் வரலாம்.

7300mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. தவம் கிடக்க வைத்தது!

நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite): இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. நத்திங்ஓஎஸ் 3.5 (NothingOS 3.5) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ (Octa Core MediaTek Dimensity 7300 Pro) சிப்செட் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஒரேவொரு கிளைப் லைட் மட்டுமே கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. ஆனால், தேதி குறிப்பிடவில்லை. ரூ.25,000 முதல் ரூ.30,000 பட்ஜெட்டில் வரலாம்.

7300mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. தவம் கிடக்க வைத்தது!

ஐக்யூ 15 (iQOO 15): இந்த ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 26ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.85 இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கிடைக்கிறது. இது ஒன்பிளஸ் மாடலிலும் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி உள்ளது. சீனாவில் ரூ.51,780 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் அதைவிட கொஞ்சம் கூடுதல் பட்ஜெட்டில் வெளியகலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro): இந்த நவம்பர் மாதத்தில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல்கள் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. தேதி விரைவில் தெரியவரும். இதில் ப்ரோ மாடலில் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core MediaTeK Dimensity 9500 3nm) சிப்செட் உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 7500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. IP69 ரேட்டிங் வர இருக்கிறது. ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 4 Smartphones Launching in November OnePlus 15 OPPO Find X9 Pro Nothing Phone 3a Lite And More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X