இந்த 2022-ல் Apple மற்றும் Samsung-ஐ திரும்பி பார்க்க வைத்த 4 பிளாக்ஷிப் போன்கள்!

|

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் (Flagship Smartphone) என்று வந்துவிட்டால், ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்களின் மாடல்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்கிற நம்பிக்கையானது, சுக்குநூறாக உடைக்கப்பட்ட ஒரு ஆண்டு என்றால் - அது 2022 தான். ஏனென்றால் இந்த ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிலான விலை நிர்ணயம் மற்றும் அம்சங்களுடன் சில அட்டகாசமான "மலிவு விலை" பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. அவைகளில் மிகவும் கவனிக்கப்பட்ட மற்றும் கவனிக்கப்பட வேண்டிய 4 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

கூகுள் பிக்சல் 7: ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை தேடும் எவருக்குமே Google Pixel 7 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு சிறந்த ஆப்ஷன் ஆகும்; அதேசமயம் மிகவும் எளிமையான சாய்ஸ்களில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளாக பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யாமல் இருந்த கூகுள், அந்த வழக்கத்தை பிக்சல் 7 சீரிஸ் அறிமுகத்தின் மூலம் உடைத்தெறிந்தது!

2022-ல் Apple, Samsung-ஐ திரும்பி பார்க்க வைத்த 4 பிளாக்ஷிப் போன்கள்!

கூகுள் பிக்சல் 7 ஆனது டென்சர் ஜி2 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பிக்சல் 6 மாடலுடன் ஒப்பிடும் போது சற்றே மெருகூட்டப்பட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் ஆனது மொபைல் போட்டோகிராஃபியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல முனைகிறது; வீடியோ ரெக்கார்டிங்கிலும் கூட எந்தவொரு குறையும் சொல்லிவிட முடியாது.

ஒட்டுமொத்தமாக, கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த கேமரா, சிறந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் (சொல்லவே வேண்டாம்) க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது என்று கையெழுத்து போட்டு எழுதியே கொடுக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 7 ஆனது ரூ.59,999 க்கு (8ஜிபி ரேம் + 128ஜிபி) விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 10டி: இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள ஸ்மார்ட்போன் OnePlus 10T 5G ஆகும். இது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'ஸ்கேல்டு-டவுன்' வெர்ஷன் ஆக இருக்கலாம். அதாவது இதன் அம்சங்களில் சில சமரசங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். எடுத்துக்காட்டிற்கு இதில் Hasselblad பிராண்டிங் கேமராக்கள் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) போன்ற அம்சங்கள் இல்லை!

ஆனாலும் கூட OnePlus 10T மாடலை குறைத்து மதிப்பிட முடியவில்லை. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் டாப்-நாட்ச் ஆக உள்ளது. மற்றும் போட்டோக்கள், வீடியோக்கள் என்று வந்துவிட்டால் இது ஒப்பீட்டளவில் OnePlus 10 Pro-விற்கு இணையாகவே உள்ளது. அதுமட்டுமா இது Snapdragon 8+ Gen 1 சிப்பை பேக் செய்கிறது; இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டை விட வேகமானது மற்றும் ஸ்மார்ட்போனை மிகவும் "கூலாக" இயங்க வைக்கும்.

மேலும் ஒன்பிளஸ் 10டி மாடல் ஆனது ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இரண்டு மடங்கு அதிக சார்ஜிங் ஸ்பீட்-ஐ வழங்குகிறது. அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மொத்தத்தில் OnePlus 10 Pro-வில் என்னென்ன கிடைக்கிறதோ, அது ஒன்பிளஸ் 10டி மாடலிலும் கிடைக்கிறது என்றே கூறலாம். ரூ.49,999 க்கு இதை விட வேறு என்ன வேண்டும்!

சியோமி 12 ப்ரோ: இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான பெஸ்ட் பட்ஜெட் விலை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் என்கிற பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது Xiaomi 12 Pro ஆகும். இது வெறுமனே பட்ஜெட் விலையிலான ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, இது ஒரு நல்ல 'ஆல் ரவுண்ட்டர்' ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனும் கூட.

ஏனென்றால், சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் அழகான மற்றும் பிரகாசமான AMOLED பேனல்களை வழங்கும் மாடல்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்ல மற்ற பிளாக்ஷிப் போன்களில் காணப்படும் டூயல் ஸ்பீக்கர்களுக்கு மாறாக இதில் மொத்தம் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன. இது அற்புதமான மல்டிமீடியா எக்ஸ்பீரியன்ஸை வழங்குவதோடு சேர்த்து அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.55,999 ஆகும்.

ஐக்யூ 9டி: இந்த பட்டியலில் உள்ள கடைசி ஸ்மார்ட்போன் iQOO 9T ஆகும். இது ஐக்யூ நிறுவனத்தின் ஹை-எண்ட் மாடல்களில் ஒன்று மட்டுமல்ல, இந்த பட்டியலில் உள்ள மிகவும் ஸ்டைல் ஆன ஸ்மார்ட்போனும் கூட. ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, பவர்ஃபுல் ஆன ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 4700mAh பேட்டரி போன்ற மற்ற சில முக்கிய அம்சங்களையும் வழங்குகிறது.

உங்களில் சிலர் பிளாக்ஷிப் போன்கள் என்கிற பட்டியலில் ஐக்யூ ஸ்மார்ட்போனிற்கு என்ன வேலை என்று நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த ஐக்யூ 9டி மாடலானது நாம் மேலே பார்த்த எந்தவொரு ஸ்மார்ட்போனிற்கும் சளித்தது அல்ல. இன்னும் சொல்லப்போனால், நாம் மேலே பார்த்த 3 போன்களுடனும் நேரடியாக மோதும் திறன் ஐக்யூ 9டி ஸ்மார்ட்போனிற்கு உண்டு. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Top 4 Best Affordable Flagship Smartphones Which Launched in 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X