ரூ.10,000 விலைக்குள்.. டாப் 3 பெஸ்ட் 5G ஸ்மார்ட்போன்.. 2024-ல் அதிகம் விற்பனையான 50MP கேமரா மாடல் Mobile..
இந்திய சந்தையில் இப்போது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு (5G mobile and smartphones) ஏகப்பட்ட டிமாண்ட் உருவாகியுள்ளது. அதிவேக இன்டர்நெட் (internet) சேவை மற்றும் தடையில்லா இணைப்பை (connectivity) பெற விரும்பும் மக்கள் குறிவைத்து பர்ச்சேஸ் (mobile purchase) செய்யும் செக்மெண்டாக ரூ.10,000 விலை மொபைல் பிரிவு பிரபலமடைந்து வருகிறது. அப்படி இந்தியாவில் வெறும் 10 ஆயிரம் ரூபாய் விலைக்குள் வாங்க கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன் மாடல்களை (Top 3 best smartphones under Rs 10,000) தான் இந்த பதிவில் ஒன்றாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
உங்கள் பட்ஜெட் ரூ.10,000 என்றாலோ அல்லது ரூ. 10,000 விலைக்குள் என்றாலோ, கட்டாயமாக இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள 3 டாப் மாடல் 5ஜி மொபைல்களை (Top 3 best 5G mobiles under Rs 10000) நீங்கள் பார்வையிட வேண்டும். இந்த பட்டியலில் உள்ள 3 மாடல்களும் சிறந்த அம்சங்கள் பேக் செய்து, பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இந்த 2024 ஆம் ஆண்டில் அதிக யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

ரூ.10,000 விலைக்குள்.. டாப் 3 பெஸ்ட் 5G ஸ்மார்ட்போன் (Top 3 best 5G mobiles under Rs 10000):
இந்த டாப் 3 மாடல் ஸ்மார்ட்போன்கள் தற்போது அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள முதல் மாடல் இதோ.
1. ரெட்மி A4 5ஜி (Redmi A4 5G):
தரமான 5ஜி மொபைலை மலிவு விலையில் வாங்க வேண்டுமென்றால், உங்கள் முதல் தேர்வில் இந்த Redmi A4 5G இருப்பது சிறப்பானது. இது 6.8 இன்ச் 120Hz டிஸ்பிளே (display), 4GB ரேம் (RAM) + 64GB ஸ்டோரேஜ், 50MP கேமரா மற்றும் 5160mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்துள்ளது. அமேசான் தளத்தில் இதன் தள்ளுபடி விலை ரூ.8,498 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.10,999 ஆகும்.
2. டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G):
இந்திய சந்தையில் சிறந்த மலிவு விலை போனாக, அட்டகாசமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்ட ஒரு சாதனம் என்றால் அது இந்த Tecno POP 9 5G ஸ்மார்ட்போனாக மட்டுமே இருக்க முடியும். இது 120Hz டிஸ்பிளேவுடன், 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ (storage), 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த விலையில் முதல் 48MP AI கேமராவை இந்த போன் வழங்குகிறது. இதன் சலுகை விலை ரூ.9,499 மட்டுமே. இதன் அசல் விலை ரூ.11,999 ஆகும்.
3. போக்கோ M6 5ஜி (Poco M6 5G):
ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் மற்றொரு பெஸ்ட் 5ஜி மொபைல் என்றால் அது இந்த Poco M6 5G தான். இது 6.74" இன்ச் அளவு கொண்ட 90Hz டிஸ்பிளே, 4ஜிபி ரேம் + 64GB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி (Battery), 50MP AI டூயல் கேமராவை (camera) கொண்டுள்ளது. இதன் சலுகை விலை ரூ.8,499 மட்டுமே. இதன் அசல் விலை ரூ.9,499 ஆகும்.


Click it and Unblock the Notifications








