Home
Mobile

டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன் 2022: மற்ற போன்களை அடித்துவிரட்டி கெத்துக்காட்டிய 10 அசுரர்கள்.!

Top 10 Most Powerful Smartphone Models 2022: இந்த ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம், 2022 ஆம் ஆண்டில் எதுவெல்லாம் பெஸ்ட்டாக அமைந்தது என்பதைத் திரும்பிப் பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருக்கிறது.

குறிப்பாக, இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் (Smartphone) இருந்து, எந்த ஸ்மார்ட்போன் மாடல் மிகவும் சிறந்த மாடலாக தேர்வு (Best smartphone) செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம்.

பெஸ்ட் என்று தேர்வு செய்யப்பட்ட டாப் 10 மோஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன் மாடல்கள்.!

பெஸ்ட் என்று தேர்வு செய்யப்பட்ட டாப் 10 மோஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன் மாடல்கள்.!

இந்த 2022 ஆம் ஆண்டில் பெஸ்ட் என்று தேர்வு செய்யப்பட்ட டாப் 10 மோஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன் மாடல்களை (Top 10 Most Powerful Smartphone Models 2022) பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஆம், இந்த 2022 ஆம் ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களாக தேர்வு செய்யப்பட்ட டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்களை (Top 10 smartphones 2022) தான் இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.!

இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? சொன்ன நீங்களே நம்ப மாட்டீங்க.!

இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? சொன்ன நீங்களே நம்ப மாட்டீங்க.!

இதில் சுவாரசியம் என்னவென்றால், அதிகம் விற்பனையாகாத மாடல்கள் தான் மிகவும் சக்தி வாய்ந்த மாடலாக பட்டியலில் முன்னிலை வகித்துள்ளன.

காரணம், இவை விலை அதிகம் என்பது ஒரு பக்கம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்களை (smartphones brand) மக்கள் அதிகம் கவனிக்கவில்லை என்பது மற்றொருபக்க உண்மையாக இருக்கிறது.

சரி, வாருங்கள் இந்த 2022 ஆம் ஆண்டில் எந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த பவர்புல் மான்ஸ்டராக இருந்தது என்று பார்க்கலாம்.

10. Xiaomi 12 Pro 5G

10. Xiaomi 12 Pro 5G

இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி மற்றும் சிறந்த டிஸ்பிளேவை வழங்கியுள்ளதினால் டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இது தவிர இதன் பிராசஸர் மற்றும் கேமரா அம்சமும் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09. iQOO 9T 5G

09. iQOO 9T 5G

இந்த iQOO 9T 5G சாதனம் அதிக மதிப்பெண்களை இதன் சிறந்த பிராசஸருக்காக (Best processor smartphone) வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இதன் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி அம்சங்களும் சிறந்த மதிப்பெண்களை வாங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9வது இடத்தில் இடம்பிடித்துள்ளது.

08. Motorola Edge 30 Ultra

08. Motorola Edge 30 Ultra

இந்த Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி ஆயுள் (Best battery smartphone) அம்சத்தில் மார்க்கை குவித்துள்ளது. இது தவிர சிறந்த டிஸ்பிளே மற்றும் சிறந்த கேமரா அம்சத்தை வழங்கிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக இந்த மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது 8வது இடத்தை பிடித்துள்ளது.

07. Samsung Galaxy Z Fold 4

07. Samsung Galaxy Z Fold 4

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமான Samsung Galaxy Z Fold 4 டிவைஸ் நமது பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இது மிகப்பெரிய டிஸ்பிளே மற்றும் பிராசஸர் தரத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று இந்த பெஸ்ட் போல்டபில் ஸ்மார்ட்போன் (Best Foldable Smartphone) சாதனமாக இடம்பிடித்துள்ளது.

06. Black Shark 5 Pro

06. Black Shark 5 Pro

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்கையில் இந்த Black Shark 5 Pro அதிகப்படியான AnTuTU மதிப்பெண்களுடன் 6வது இடத்தில் கெத்தாக நிற்கிறது. சிறந்த சிப்செட் மற்றும் தரமான தயாரிப்பிற்காக இந்த ஸ்மார்ட்போன் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளது. இது பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் (Best gaming smartphone) மாடலாகவும் இடப்பிடித்துள்ளது.

05. Oppo Find X5 Pro

05. Oppo Find X5 Pro

சிறந்த கேமரா (Best camera smartphone).. சிறந்த டிஸ்பிளே (Best display smartphone).. சிறந்த டிசைன் என்று பல ரவுண்ட்களில் (Best All Rounder Smartphone) அதிக மதிப்பெண்களை பெற்று Oppo Find X5 Pro ஸ்மார்ட்போன் 5வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதன் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் பலர் இந்த போனை வாங்க தவறிவிட்டார்கள்.

04. OnePlus 10 Pro

04. OnePlus 10 Pro

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் தரமான கேமரா அம்சங்களுடன் அதிகப்படியான ரசிகர் மதிப்பெண்களை பெற்றுள்ளது. இந்த டிவைஸ் 4வது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பிந்திய வாடிக்கையாளர் சேவையும் சிறப்பாக அமைந்துள்ளது.

03. Asus ROG 6

03. Asus ROG 6

இந்த ஸ்மார்ட்போனை 3வது இடத்தில் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்க கூடும். ஆனால், இந்த 2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் பட்டியலில் (Best Performance Smartphone) அதிகப்படியான AnTuTu மதிப்பினை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சிப்செட், சிறந்த பெர்பார்மென்ஸ், சிறந்த கேமரா மாற்று பேட்டரி என்று ஆல்ரவுண்டராக இது டிவைஸ் முன்னிலையில் உள்ளது.

02. Google Pixel 7 Pro

02. Google Pixel 7 Pro

வழக்கம் போல் Apple மற்றும் Google இடையிலான போட்டியில் சிறந்த யூசர் அனுபவத்தை (Best User Experience Smartphone) வழங்கி, டிசைனில் மட்டும் சொதப்பிய காரணத்தினால் Google Pixel 7 Pro இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஆப்பிள் போன் உடன் ஒப்பிடுகையில் இதன் டிசைன் மிகவும் பெரிதாகவும், அதிக கணம் கொண்டதாகவும் அமைந்துவிட்டது.

01. Apple iPhone 14 Pro Max

01. Apple iPhone 14 Pro Max

சிறந்த டிசைன் (Best design smartphone), சிறந்த பாதுகாப்பு, சிறந்த டிஸ்பிளே சிறந்த கேமரா மற்றும் சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் என்று எல்லா ரவுண்டிலும் வெற்றி பெற்று Apple iPhone 14 Pro Max முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

வழக்கம் போல ஆப்பிள் டிசைன் சிம்பிள் ஆக அமைக்கப்பட்டு மக்களின் ஈர்ப்பை பெற்று அதிக மதிப்பெண்களை லுக் பிரிவிலும் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலில் ஜஸ்ட் மிஸ் இல் முதல் 10 இடங்களை தவறவிட்ட தரமான டிவைஸ்கள்.!

டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலில் ஜஸ்ட் மிஸ் இல் முதல் 10 இடங்களை தவறவிட்ட தரமான டிவைஸ்கள்.!

இந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் போக, இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களும் மிக நெருக்கமான போட்டியில் 10 இடங்களை தவறவிட்டுள்ளன.

இருப்பினும், இந்த மாடல்களுடன் நேரடி போட்டியில் களமிறங்கிய Asus ZenFone 9, Mi 12T Pro, Red Magic 7, Vivo X80, Samsung S22 Ultra, Xiaomi 12S Ultra, Sony Xperia 1 IV, Motorola G82, Samsung Galaxy Z Flip 4 ஆகிய மாடல்களும் சிறந்த பவர்புல் அம்சங்களுடன் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top 10 Most Powerful Smartphone Models Ranking in 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X