10,000 பட்ஜெட்டில் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்
சில ஆண்டுகளுக்கு முன் வரை சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டி இந்த நிலையை மாற்றியுள்ளது என்று கூறும் அளவு ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்து வருகின்றது என்று கூறலாம்.
வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்
ஸ்மார்ட்போன்களின் விலை குறைவதோடு விலை குறைவாகவே பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. அந்த வகையில் சிறந்த கேமரா கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஹூவாய்
குறைந்த விலையில் கிடைக்கும் குவாட்கோர் ஸ்மார்ட்போன் என்பதோடு 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

சியோமி
வாங்க இங்க க்ளிக் செய்யவும்
குவாட்கோர் 400 ஸ்னாப்டிராகன் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனில் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.6 எம்பி முன்பக்க கமராவும் இருக்கின்றது.

லெனோவோ
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
இது புதிய வகை 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.6,999க்கு கிடைக்கின்றது. இதில் 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

ஏசஸ்
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு இன்டெல் ஆடம் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ்
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
ரூ.8,999 க்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முந்பக்க கேமரா இருக்கின்றது.

ஆல்காடெல்
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
இந்த ஆக்டாகோர் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
குவாட்கோர் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வசதி இருப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.

சோலோ கியு 1020
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
மீடியாடெக் குவாட்கோர் பிராஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன் பக்க கேமரா இருக்கின்றது.

கார்பன்
வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
குவாட்க்கோர் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.

சியோமி
4ஜி சேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.


Click it and Unblock the Notifications