Home
Mobile

இதோ தள்ளுபடி லிஸ்ட்.. சீப் ஆன விலையில் 4G, 5G போன்கள்.. OnePlus முதல் Samsung வரை.. Amazon-ல் ஆஃபர் மழை!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்லைன் விற்பனையான அமேசான் ப்ரைம் டே விற்பனை இன்று மற்றும் நாளை (அதாவது ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி ஜூலை 16 ஆம் தேதி இறுதி வரை) நடக்கிறது. வழக்கம் போல இம்முறையும் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மாட்போன்கள் மீது எக்கச்சக்கமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த ப்ரைம் டே விற்பனையின் போது, எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற குழப்பம் உங்களுக்கு இருந்தால்.. ரூ.20,000, ரூ.30,000, ரூ.40,000, ரூ.60,000 மற்றும் ரூ,1 லட்சம் என்கிற வெவ்வேறு பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் சில பெஸ்ட் 5ஜி போன் டீல்களின் பட்டியல் இதோ!

சீப் ஆன விலையில் 4G, 5G போன்கள்.. Amazon-ல் ஆஃபர் மழை!

ரூ.20,000 க்கு கீழ் என்னென்ன போன்களை வாங்கலாம்? அமேசான் ப்ரைம் டே விற்பனை நிகழ்வின் போது, ரெட்மி 11 ப்ரைம் 4ஜி (Redmi 11 Prime 4G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.நினைவூட்டும் வண்ணம் இது இந்தியாவில் ரூ.12,999 க்கு அறிமுகமானது. இதேபோல சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) மாடலானது ரூ.12,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்

ரூ.30,000 க்கு கீழ் என்னென்ன போன்களை வாங்கலாம்? சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மாடலானதுஅதன் அசல் விலையான ரூ.30,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ரூ.22,499 க்கு விற்பனை செய்யப்படும் ரெட்மி 50ஐ Redmi 50i ஐ வாங்குவதையும் கருத்தில் கொள்ளலாம். மற்ற ஒப்பந்தங்கள் அமேசானால் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரூ.40,000 க்கு கீழ் என்னென்ன போன்களை வாங்கலாம்? 120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் வரும் ஐக்யூ 9டி 5ஜி (iQOO 9T 5G) மாடலானது ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த போனின் அசல் விலை ரூ.49,999 ஆகும்.

இதேபோல ஐக்யூ நியோ 7 ப்ரோ மாடலன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும். ஒருவேளை ஐக்யூ பிராண்டட் போன் வேண்டாம் என்றால் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். இது அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.60,000 - ரூ.70,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சிறந்த 5ஜி போன் டீல்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) ஸ்மார்ட்போனானது ரூ.73,999 க்கு வாங்க கிடைக்கும். போல்டபிள் ஸ்மார்ட்போனை விரும்புவோர் புதிய மோட்டோரோலா ரேஸர் 40 மாடலை ரூ.54,999 க்கு வாங்கலாம். மேலும் சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) மாடலை ரூ.71,999 க்கு வாங்கலாம்.

ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் வாங்க கிடைக்கும் சிறந்த 5ஜி போன் டீல்கள்: ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ரூ.1,29,900 க்கு விற்பனை செய்யப்படும். முன்னதாக இது ரூ 1,39,900 க்கு வாங்க கிடைத்தது. நீங்களொரு ஆப்பிள் ரசிகர் இல்லையென்றால், சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) மாடலை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.1,15,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Today Best 4G and 5G Mobile Offer Deals in Amazon Prime Day Sale 2023 on July 15 and July 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X