அவசரப்பட்டியே குமார்! ரூ.15,000 இருந்தாலே சிறந்த 5G போன் வாங்கி இருக்கலாம்: நீங்க மிஸ் பண்ணாதீங்க!

|

இந்தியாவில் 5G சேவைகள் கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரதானமாக இருக்கும் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவையில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. எனவே உங்களிடம் 5ஜி போன் இல்லை என்றால் அதை புதிதாக வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. அதன்படி ரூ.15,000க்கு கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

ரூ.10,000க்கு கீழ் 5ஜி போன்கள்

ரூ.10,000க்கு கீழ் 5ஜி போன்கள்

உங்களது 4ஜி போன் நன்றாக இருந்தாலும் தற்போது 5ஜி போனுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மொபைல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆரம்பத்தில் உச்ச விலையில் அறிமுகமான 5ஜி போன்கள் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் ரூ.10,000க்கு கீழ் கூட 5ஜி போன்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15,000க்கு கீழான 5ஜி போன்கள்

ரூ.15,000க்கு கீழான 5ஜி போன்கள்

புதிய 5ஜி போன் வாங்க வேண்டும் என்ற ஆசை தான் ஆனால் விலை அதிகாமாக இருக்கிறதே என்று சிந்திப்பவர்களாக நீங்கள் இருந்தால் இனி இந்த கவலை வேண்டாம். ரூ.15,000க்கு கீழ் கூட 5ஜி போன்களை வாங்கலாம். ரூ.15,000க்கு கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களின் பட்டியில் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதிக விலைக்கு 5ஜி போனை விருப்பமில்லை மலிவு விலை என்றால் ஓகே என்ற திட்டமிட்டவர்களாக நீங்கள் இருந்தால் இதோ உங்களுக்கான பட்டியல்.

iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது வேகமான செயல்திறனை வழங்கும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.68 இன்ச் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விலைப்பிரிவில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே என்பது மிகவும் அரிதான ஒன்று. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பாக்ஸ் இல் சார்ஜர் அடாப்டர் இடம்பெறாது. சார்ஜிங் அடாப்டரை தனியாக தான் வாங்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐக்யூ இசட்6 லைட் விலை

ஐக்யூ இசட்6 லைட் விலை

குறிப்பிட்டது போல் 5ஜி ஆதரவு இந்த போனில் இருக்கிறது. அதேபோல் நீண்ட கால மென்பொருள் ஆதரவை வழங்குகிறது இந்த ஸ்மார்ட்போன். இரண்டு வருட முக்கிய ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு இணைப்புகளை பெறும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. எனவே ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட்டை இந்த ஸ்மார்ட்போன் பெறும். ஐக்யூ இசட்6 லைட் 5ஜி விலையானது பிளிப்கார்ட்டில் ரூ.13,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M13 5G

Samsung Galaxy M13 5G

Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனானது சிறந்த 5ஜி போன் ஆகும். பிரபல நிறுவனங்களின் போன்கள் தான் வாங்குவோம் என திட்டமிட்டவர்கள் இந்த சாம்சங் போனை வாங்கலாம். சிறந்த டிஸ்ப்ளே, போதுமான அளவு கொண்ட பேட்டரி என பல சிறப்பம்சங்கள் இதில் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் HD+ ஆதரவுடன் கூடிய 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy M13 5G விலை

Samsung Galaxy M13 5G விலை

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இதில் சிறந்த கேமரா லென்ஸ்கள் இடம்பெற்றுள்ளது. பகல் நேரங்களில் சிறந்த புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கிறது.

Samsung Galaxy M13 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் விலையானது பிளிப்கார்ட்டில் ரூ.14,299 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Poco M4 5G

Poco M4 5G

மலிவு விலை 5ஜி போன்களின் பட்டியலில் பிரதான இடம் பிடித்திருக்கிறது Poco M4 5G. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. கேமராவிலும் மேம்பட்டதாக இருக்கிறது.

Poco M4 5G விலை

Poco M4 5G விலை

Poco M4 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை பிளிப்கார்ட்டில் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Time to Switch on 5G: Perfect opportunity to buy the best 5G smartphone under Rs.15000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X