பணம் முக்கியம் மக்களே.. கம்மி விலையில் கெத்தாக 5G சேவைக்கு மாறலாம்!

|

இந்தியாவில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி சேவை அறிமுகமாகி இருக்கிறது. நீங்கள் 5ஜி ஆதரவுடன் கூடிய புதிய போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான நேரமாகும். காரணம் ரெட்மி, போக்கோ, சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. பட்ஜெட் விலை என்றால் எவ்வளவு என்ற கேள்வி வரலாம், தகவலை பார்க்கலாம்.

ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பல இ-காமர்ஸ் தளங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதீத தள்ளுபடியுடன் வழங்குகிறது. அதன்படி 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கிறது.

ஆன்லைன் விற்பனை தளங்களில் தீபாவளி பண்டிகை விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் ரெட்மி, போக்கோ, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் சற்று மேம்பட்டு இருக்கிறது. பட்டியலை பார்க்கலாம் வாங்க.

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனானது ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இதில் அதிக தெளிவுத்திறன் மற்றும் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.6 இன்ச் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

முழு எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே. அதோடு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவும் இருக்கிறது.

அதிவேக சார்ஜிங் வசதி

அதிவேக சார்ஜிங் வசதி

இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் செயல்திறன் மிகவும் வேகமாக இருக்கிறது. சிறந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவும் இதில் உள்ளது.

5,000mAh பேட்டரி ஆதரவுடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது. அதிவேகத்தில் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.1000 தள்ளுபடி கூப்பனை பயன்படுத்தி அமேசானில் ரூ.14,999 என இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Poco M4 5G

Poco M4 5G

ரூ.11,000க்கும் குறைவான விலையில் 5ஜி போனை வாங்க விரும்புவோருக்கு Poco M4 சிறந்த தேர்வாக இருக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

இதன்மூலம் அன்றாடப் பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் இந்த ஸ்மார்ட்போனில் மேற்கொள்ளலாம்.

இதில் 5000 எம்ஏஎச் என்ற மிகப் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. இதில் 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி விலை

போக்கோ எம்4 5ஜி போனானது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,999 என கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரிண்ட் இன் விலை இதுவாகும்.

Samsung Galaxy M13 5G

Samsung Galaxy M13 5G

சாம்சங் நிறுவனத்தின் பல 5ஜி போன்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. அதன்படி கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy M13 5G. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கிறது. இதில் நியாயமான பேட்டரி ஆதரவுடன் பெரிய அளவிலான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் எச்டி+ ஆதரவைக் கொண்டிருக்கிறது இதன் டிஸ்ப்ளே.

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. விலைக்கு ஏற்ற கேமரா அம்சங்கள் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த போன் ரூ.11,999 என கிடைக்கிறது.

Realme 9i 5G

Realme 9i 5G

Realme 9i 5G ஸ்மார்ட்போனும் ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த தேர்வாக இருக்கும். இது ஆல் ரவுண்டர் போன் ஆகும். இதில் 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ரியல்மி 9ஐ 5ஜி போன் விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை இதே விலைக்கு வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Time to Switch on 5G: List of 5G smartphones available under Rs.15000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X