டிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?

|

உலகின் மிகப் பிரபலமான டிக் டாக் பயன்பாட்டை உருவாக்கிய பைட்டுடான்ஸ் என்ற சீனா நிறுவனம், தற்பொழுது அதன் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போன்

புதிய ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போன்

கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போன் மாடலும் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டு நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது.

மிரட்டலான அம்சங்களுடன் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3

மிரட்டலான அம்சங்களுடன் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3

இந்த புதிய ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் கொண்ட முழு எச்.டி அமோலேட் டிஸ்பிளேயுடன், 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் நாட்ச் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது..உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது..

ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 சிறப்பம்சம்

ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 சிறப்பம்சம்

 • 6.39' இன்ச் கொண்ட முழு எச்.டி அமோலேட் கொண்ட வாட்டர் ட்ரோப் நாட்ச் டிஸ்பிளே
 • குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
 • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
 • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு
 • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு
 • பின்பக்க குவாட் கேமரா அமைப்பு
 • 48 மெகா பிக்சல் கொண்ட சோனி IMX586 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா
 • 13 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
 • 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ லென்ஸ் கேமரா
 • 5 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
 • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
 • அடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா? தரமான ஐடியா.!அடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா? தரமான ஐடியா.!

  ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 விலை

  ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 விலை

  ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ. 29,000 ஆகும். அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.32,000 என்றும் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.36,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TikTok Launches New Smartphone Named Smartisan Jianguo Pro 3 With Snapdragon 855 Plus Processor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X