வரப்போகும் கேலக்ஸி நோட் 8 தோல்விக்கு காரணம் பேட்டரி அல்ல, இதுவாக இருக்கலாம்.!

கருவி சார்ந்த எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாய் கிளம்பியுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள துண்டு தகவல் உண்மையாகினால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது.

|

சாம்சங் நிறுவனத்தின்லட்சிய தயாரிப்பான கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது மட்டுமினிற் பல கைபேசிகளில் பேட்டரி சிக்கல்கள் காரணமாக திரும்பவும் பெறப்பட்டது. இது நிறுவனத்தின் பெயரை கெடுத்தது மட்டுமின்றி, சாம்சங் நிறுவனத்தின் நோட் வரிசை மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இழந்த பிராண்ட் பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் அதன் நோட் 8 சார்ந்த பணிகளில் தீவிரமாக பணியாற்றி இப்போது அக்கருவி சார்ந்த எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாய் கிளம்பியுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள துண்டு தகவல் உண்மையாகினால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

அதாவது வெளியான தகவல் வரவிருக்கும் சாம்சங் கேலக்சி நோட் 8 சாதனத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை இழக்க நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு செப்டம்பர் மாதம் சந்தை விற்பனையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கசிவு

சமீபத்திய கசிவு

கேலக்ஸி நோட் 7 சாதனமும் கடந்த ஆண்டு காலத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அதிகப்படியான கசிவுகளில் சிக்கி வரும் கேலக்ஸி நோட் 8 சாதனத்தின் சமீபத்திய கசிவு இக்கருவி திரையில் கைரேகை ரீடர் கொண்டிருக்காது என்று அறிவித்துள்ளது.

நிறுவ முயன்றோம்

நிறுவ முயன்றோம்

"கேலக்ஸி குறிப்பு 8-ல் ஒரு காட்சி-ஒருங்கிணைந்த கைரேகை சென்சார் ஒன்றை நிறுவ முயன்றோம், ஆனால் இந்த மூலோபாய தொலைபேசியின் பாதுகாப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப வரம்புகளால் அது நிறுவப்படவில்லை" என்று சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நிறுவனங்களுடன் இணைந்து

நிறுவனங்களுடன் இணைந்து

இதற்கிடையில், சாம்சங் அதன் எதிர்கால சாதனங்களை அறிமுகப்படுத்தும் நம்பிக்கையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயத்தில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கைரேகை ரீடர் அம்சம்

கைரேகை ரீடர் அம்சம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ சாதனங்களில் இடம்பெற்ற அதே தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கும் சாம்சங் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும். ஆனால் அது நடக்காது. திரையில் கைரேகை ரீடர் அம்சம் கொண்டு வரவிருக்கும் கேலக்ஸி நோட் 8 இருக்க முடியாது என்று அறிக்கை விளக்கமளித்துள்ளது.

6.3 அங்குல இன்பினிட்டி

6.3 அங்குல இன்பினிட்டி

வெளியான தகவளின்கீழ் கேலக்ஸி நோட் 8 ஒரு 6.3 அங்குல இன்பினிட்டி காட்சி, ஒரு இரட்டை பின்புற கேமரா - 12எம்பி அகல கோணம் கேமரா மற்றும் 13எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஒரு ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட முன்பக்க ஸ்னாப்பர், ஒரு கருவிழி ஸ்கேனர், மற்றும் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் டிஜிட்டல் குரல் உதவியாளரான பிக்ஸ்பை (Bixby) ஆகிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
This will disappoint fans who are waiting for Samsung Galaxy Note 8: Release date, features, other details. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X