திடீர் விலைக்குறைப்பு.. 50MP கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் இந்த Vivo போனின் விலை குறைந்தது!
50எம்பி மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000 எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம் உட்பட மேலும் பல முக்கிய அம்சங்களை கொண்ட விவோ ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் இங்கே பேசுவது - கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்35 (Vivo Y35) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனின் பழைய விலை என்ன? விலைகுறைப்பிற்கு பின்னர் என்ன விலைக்கு விற்கப்படுகிறது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

விவோ ஒய்35 ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் பழைய விலை: நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் இது ரூ.17,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போனின் மீது ரூ.500 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவோ ஒய்35-யின் இந்திய விலை நிர்ணயம் ரூ.16,999 ஆக குறைந்துள்ளது.
விலைக்குறைப்பு மட்டுல்ல விவோ நிறுவனமானது விவோ ஒய்35 ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 கூடுதல் கேஷ்பேக் ஆஃபரையும் வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ (ICICI), எஸ்பிஐ (SBI), யெஸ் பேங்க் (Yes Bank), ஃபெடரல் பேங்க் (Federal Bank) ஏயு ஸ்மால் பைனான்ஸ் (AU Small Finance) மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) வழியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக ரூ.1,000 வரையிலான கேஷ்பேக்கும் கிடைக்கும்.
அகேட் பிளாக் (Agate Black) மற்றும் டான் கோல்ட் (Dawn Gold) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் விவோ ஒய்35 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து வி-ஷீல்டு பாதுகாப்பு திட்டங்கள் (V-Shield Protection Plans) போன்ற பிற நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.
விவோ ஒய்35 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: விவோ ஒய்35 ஸ்மார்ட்போனானது 1080 x 2408 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை (Peak Brightness) கொண்ட 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 680 Chipset) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மேலும் விரிவாக்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera) உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் 44W பிளாஷ்சார்ஜ் (FlashCharge) தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக விவோ ஒய்35 ஆனது ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் தடையற்ற கனெக்டிவிட்டிக்கான ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








