யாராலும் முடியாததை சாதிப்பதே சாம்சங் நிறுவனத்தின் பொழுதுபோக்கு.!

|

மடங்கக்கூடிய, அதாவது பிளிப் போன் தயாரிக்கும் முடிவில் மிகவும் தீர்க்கமாக உள்ளவொரு நிறுவனமாக சாம்சங் திகழ்கிறது. எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் பிலிப் போன் தயாரிப்பை சாம்சங் விட்டுக்கொடுக்காது என்பதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு தான் - எஸ்எம்-டபள்யூ2018.!

யாராலும் முடியாததை சாதிப்பதே சாம்சங் நிறுவனத்தின் பொழுதுபோக்கு.!

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு எஸ்எம்- ஜி9298 என்ற சாம்சங் ப்ளிப் போன் சீனாவில் அறிமுகமாகி சரியாக மூன்று மாதங்கள் கழித்து, சாம்சங் நிறுவனம் இப்போது ஒரு புதிய ப்ளிப் போன் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இக்கருவி எஸ்எம்-டபள்யூ2018 ஆக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாக்ஷிப் அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது.!

பிளாக்ஷிப் அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது.!

வரவிருக்கும் இந்த புதிய சாம்சங் ப்ளிப் போன் ஆனது சில பிளாக்ஷிப் அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது என்பது தான் ஹைலைட். இன்று (வியாழன்) வெளிவந்த லீக்ஸ் தகவலில் இக்கருவியின் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பு.!

கிட்டத்தட்ட ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பு.!

அந்த புகைப்படங்கள் கருவியின் மேல் (ஸ்க்ரீன்) மற்றும் கீழ் (கீபேட்) பேனல்கள் கிட்டத்தட்ட ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பை பெற்றுள்ளதுடன் அதுவொரு பிரஷ்டு உலோக வடிவமைப்பை கொண்டுள்ள்ளதையும் வேலைப்படுத்தியுள்ளது.

எல்இடி ப்ளாஷ், கேம், கைரேகை ரீடர்.!

எல்இடி ப்ளாஷ், கேம், கைரேகை ரீடர்.!

எஸ்எம்-டபள்யூ2018 சாதனத்தின் பின்புறமானது கண்ணாடியால் செய்யப்பட்டதாக தோன்றுகிறது. ஏனெனில் அதில் பதிந்துள்ள கைரேகை மிக தெளிவாக அதன் மேற்பரப்பில் காணப்படுகிறது. கருவியின் பின்புற கேமராவானது, இடதுபுற எல்இடி ப்ளாஷ் மற்றும் வலதுபுற கைரேகை ரீடருக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.!

உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.!

இன்னும் சொல்லப்போனால் இக்கருவி சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை போன்றே உள்ளது. இக்கருவியில் ஐரிஸ் ஸ்கேனர் அம்சம் இடம்பெறுமென முந்தையை லீக்ஸ் தகவல்கள் கூறியிருந்தாலும் அது சார்ந்த உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி.!

4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி.!

இன்னும் சில முந்தைய அறிக்கைகளின் படி, ஆனது இரண்டு 4.2 அங்குல முழு எச்டி டிஸ்பிளேகள் கொண்டிருக்கும் மற்றும் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயங்கும். 4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுருக்கலாம். கூடுதலாக, 12எம்பி பின்புற கேமராவும் 5எம்பி முன்பக்க கேமராவும், 2,300 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கலாம்.

ஏற்கனவே சோதனைக்கு உள்ளாகிவிட்டது.!

ஏற்கனவே சோதனைக்கு உள்ளாகிவிட்டது.!

கடந்த மாதம் வெளியான சில அறிக்கைகள் எஸ்எம்-டபள்யூ2018 கருவியானது ஏற்கனவே சோதனைக்கு உள்ளாகிவிட்டதாகவும், அது பதிப்பு எண் டபுள்யூ2018இசெட்சியூ0ஏக்யூஐ9 என்ற பெயரின் கீழ் இயக்கப்பட்டுள்ளது என்றும் பரிந்துரைக்கின்றன.

2000-க்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள்.!

2000-க்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள்.!

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சீன சந்தையில் முன்னர் வெளியான எஸ்எம்- ஜி9298 கருவியை போன்றே 2000-க்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள் என்ற புள்ளியை எட்டலாம். மற்றும் சீன சந்தைகளில் மட்டுமே இக்கருவி அதன் விற்பனையை நிகழ்தலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
SM-W2018: This upcoming Samsung flip phone, expected to have flagship-level specs, is a stunner. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X