ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி மாறுபாடும் மலிவுதான்.!
இதன் 3ஜிபி மற்றும் 4ஜிபி பதிப்புகளில் கைரேகை சென்சார் அம்சம் ஒன்றும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பெய்ஜிங்கில் சுமார் ரூ.6,842/- என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் பதிப்பும் மலிவான விலை நிர்ணயத்தையே பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில், இது இரண்டு பதிப்புகள் கொண்டது, இதன் முதன்மை மாதிரி இன்னும் சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு உயர்-இறுதி மாதிரிகள்
இக்கருவியின் நிலையான மாதிரி 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புடன் ஸ்னாப்டிராகன் 420 செயலி மூலம் இயங்கும் மறுபக்கம் வெளியாகியுள்ள இரண்டு உயர்-இறுதி மாதிரிகள் ஸ்னாப்ட்ராகன் 435 உடன் முறையே 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்புத்திறன் கொண்டுள்ளது.

இரட்டை சிம் ஸ்லாட் ஆதரவு
மொத்தம் வெளியாகியுள்ள மூன்று ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போன்களுமே மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டு மெமரி நீட்டிப்பு ஆதரவு மற்றும் இரட்டை சிம் ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ.11,736/- என்ற விலை குறியீட்டில்
ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட உயர் இறுதி பதிப்பானது சுமார் ரூ.11,736/- என்ற விலை குறியீட்டில் சியோமி வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பிளாஷ் சேல்
இருப்பினும், இக்கருவியின் விற்பனை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மி மால் தளத்தில் கிடைக்கவில்லை, ஆக இதுவொரு வெளிப்படையான ஃபிளாஷ் சேல் என்று கிஸ்மோசீனா தெரிவித்துள்ளது. அடுத்த விற்பனை எப்போது என்ற விவரங்கள் இல்லை.

3080எம்ஏஎச் பேட்டரி
ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 5.5 அங்குல எச்டி டிஸ்பிளே, பின்புற உலோக வடிவமைப்பு, டைப்-சி சார்ஜிங் போர்ட், 3080எம்ஏஎச் பேட்டரி ஆகிய பிரதான அம்சங்கள் கொண்டுள்ளது. இதன் 3ஜிபி மற்றும் 4ஜிபி பதிப்புகளில் கைரேகை சென்சார் அம்சம் ஒன்றும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை , எல்இடி ப்ளாஷ் மற்றும் முழு எச்டி வீடியோ பதிவு ஆகிய அம்சங்கள் கொண்ட 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் எப் / 2.2 aதுளை, எல்இடி பிளாஷ், பிடிஏஎப் ஆகிய அம்சங்கள் கொண்ட 13எம்பி பின்புற கேமராவும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
