மோட்டோ எக்ஸ் 4 - இறுதி வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறிப்புகள் வெளியானது.!

|

இந்த ஆண்டு, மோட்டோரோலா நிறுவனம் அதன் பல ஸ்மார்ட்போன்கள் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது என்பதை அறிவோம். அதில் தலைமை சாதனமான மோட்டோ இசெட்2 பிளே மற்றும் மோட்டோ இசெட்2 போர்ஸ், பட்ஜெட் நட்பு சாதனமான மோட்டோ சி தொடர்கள் வரை பல ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகின்றன.\

மோட்டோ எக்ஸ் 4 - இறுதி வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறிப்புகள்.!

இருப்பினும், மோட்டோரோலாவின் ரசிகர்கள் ஆவலுடன் மற்றும் பொறுமையாக காத்திருக்கிறார்கள் என்றால் அது மோட்டோரோலாவின் எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களுகாகத்தான் இருக்க வேண்டும்.

மோட்டோ எக்ஸ்4 இறுதி வடிவமைப்பு

மோட்டோ எக்ஸ்4 இறுதி வடிவமைப்பு

அவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் சில ஸ்கெட்ச் விவரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் வெளிவந்திருந்தாலும் அது திருப்திகரமாக அமையவில்லை. ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி மூலம் வெளியாகியுள்ள மோட்டோ எக்ஸ்4 இறுதி வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறிப்புகள் நிச்சயமாக திருப்தி அளிப்பதாக உள்ளது.

வட்ட முனைகள்

வட்ட முனைகள்

வடிவமைப்பு வாரியாக, மோட்டோ எக்ஸ் 4 ஆனது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் ஆகியவற்றில் இடம்பெறும் ஒரு வட்ட கேமரா கேமரா அலகு, வட்ட முனைகள் மற்றும் கேமரா லென்ஸிற்கு கீழே ஒரு மோட்டோரோலா லோகோ செட் ஆகியவற்றுடன், மோட்டோரோலாவின் தற்போதைய வடிவமைப்பு நெறிமுறைகளை கொண்டிருக்கலாம்.

3,000 எம்ஏஎச் பேட்டரி

3,000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ வரம்பில் இருந்து வேறுபடும் நோக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் உலோகத்திற்கு பதிலாக கண்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மோட்டோ எக்ஸ்4 அம்சங்களை பொறுத்தமட்டில், 5.2 அங்குல எல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 630 செயலி, 3,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு கைரேகை சென்சார் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

சேமிப்பு

சேமிப்பு

இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாதிரிகள் - வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் அதேசமயம் ஆசியா பசிபிக் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படும் மாதிரியானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருக்கும். முன்னர் வெளியான தகவலின்படி, இக்கருவி அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்று கூறியது. அந்த கூற்றை சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

4கே வீடியோ

4கே வீடியோ

எக்ஸ்4 அதன் பின்புறத்தில், 8எம்பி அல்ட்ரா வைட் இரண்டாம் நிலை கேமராவுடன், இரட்டை-ஆட்டோபாக்கஸுடன் 12எம்பி முதன்மை ரியர் கேமரா கொண்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது. முன்பக்கம், செல்பீக்களுக்கான 16எம்பி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது 4கே வீடியோக்களை பதிவு செய்யும் ஆதரவும் கொண்டுள்ளது.

கருப்பு மற்றும் நீலம்

கருப்பு மற்றும் நீலம்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஆனது பிரேசிலில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 24 அன்று அறிமுகப்படுத்தப்படும் என சில தகவல்கள் கூறுகின்றன. கருப்பு மற்றும் நீலம் என்ற இரண்டு வண்ண வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
This the Moto X4, key specs and final design leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X