4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.11,999/- தானாம்.!

விரிவான புகைப்படங்களை கைப்பற்றும் நோக்கத்தில் முன்பக்கம் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது.

|

ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமமென்ற எல்லையை தொட்டுப்பார்க்க விரும்பும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள்ர்களுக்கு கடும்போட்டியை வழங்கும் நோக்கத்தில் சில அமெரிக்க பிராண்ட்களும் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது - இந்த இடத்தில குறிப்பிடப்படும் அமெரிக்க பிராண்ட் ஆண்டு - ஆப்பிள் நிறுவனம் அல்ல.

அமெரிக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான இன்போகஸ், நேற்று (புதன்கிழமை) இந்தியாவில் அதன் இரண்டு கேமரா மையப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. வெளியான பட்ஜெட் நட்பு ஸ்மார்ட்போன்களில் ஒன்று மொத்தம் நான்கு கேமராக்களை தன்னுள் கொண்டுள்ளது.

4 கேமராக்கள்

4 கேமராக்கள்

இன்போகஸ் ஸ்னாப் 4 ஆனது மொத்தம் நான்கு கேமராக்களுடன் வருகிறது. அதாவது விரிவான புகைப்படங்களை கைப்பற்றும் நோக்கத்தில் முன்பக்கம் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது.

எல்இடி ப்ளாஷ் மற்றும் டிஜிட்டல் ஜூம்

எல்இடி ப்ளாஷ் மற்றும் டிஜிட்டல் ஜூம்

பின்புறத்தில், எப் / 2.2 துளையுடனான 13எம்பி சென்சார் கொண்டுள்ளது உடன் எப்/ 2.4 துளையுடனான் 8எம்பி சென்சாருடன் இணைந்துள்ளது. இந்த கேமராக்கள் ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் டிஜிட்டல் ஜூம் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

போக்கே விளைவு

போக்கே விளைவு

இன்போகஸ் ஸ்னாப் 4 ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரத்துறையை பொறுத்தமட்டில், எப்/ 2.2 துளையுடனான இரண்டு 8எம்பி சென்சார்கள் கொண்டுள்ளத்து. இதன் கேமிராக்கள் எந்த அளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும், போக்கே விளைவுகளை எவ்வாறு வெளிப்படுத்தும் போன்ற விவரங்கள் இல்லை.

ஒருங்கிணைந்த கைரேகை ஸ்கேனர்

ஒருங்கிணைந்த கைரேகை ஸ்கேனர்

இன்போகஸ் ஸ்னாப் 4 ஸ்மார்ட்போனின் கவர்ச்சிகரமான கேமராக்களை தவிர்த்து, இக்கருவி 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ், 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே உடன் ஒருங்கிணைந்த கைரேகை ஸ்கேனர் ஹோம் பொத்தானை கொண்டுள்ளது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

பிரீமியம் தோற்றத்தை உறுதிப்படுத்தும் உலோக யூனிபாடி வடிவமைப்பை கொண்டுள்ள இக்கருவி 3000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு உடனான ஒரு 64-பிட் ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6750என் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

செப்டம்பர் 26 முதல்

செப்டம்பர் 26 முதல்

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இன்போகஸ் ஸ்னாப் 4 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் மற்றும் 4ஜி வோல்ட் ஆதரவையும் வழங்குகிறது. நட்பு பட்ஜெட் விலைக்குள் பிரீமியம் அம்சங்கள் கொண்ட இக்கருவி ரூ.11,999/- என்ற விலைக்கு வருகிற செப்டம்பர் 26 முதல் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

டர்போ 5 ப்ளஸ்

டர்போ 5 ப்ளஸ்

மறுகையில் வெளியான டர்போ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனும், மலிவான விலையில் சமமான மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. இன்போகஸ் டர்போ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று கேமிராக்களுடன் வருகிறது. அதாவது இரண்டு பின்பக்க கேமரா மற்றும் ஒரு செல்பீ கேமரா கொண்டு ரூ.8,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது.

13எம்பி மற்றும் ஒரு 5எம்பி

13எம்பி மற்றும் ஒரு 5எம்பி

செப்டம்பர் 21 தொடங்கி அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் இக்கருவி யின் அம்சங்களை பொறுத்தவரை, பின்புற கேமரா அமைப்பானது எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 13எம்பி சென்சார் மற்றும் ஒரு 5எம்பி சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கம் ஒரு 5எம்பி சென்சார் கொண்டுள்ளது.

3 ஜிபி ரேம்

3 ஜிபி ரேம்

மேலும் 5.5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 4950எம்ஏஎச் பேட்டரி, ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750 எஸ்ஓசி, 3 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட், உலோக யூனிபாடியுடன் உட்பொதிக்கப்ட ஒரு கைரேகை ஸ்கேனர், இரட்டை சிம் மற்றும் 4ஜி வோல்ட் ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.

சியோமி, மோட்டோரோலா, லெனோவா, நோக்கியா

சியோமி, மோட்டோரோலா, லெனோவா, நோக்கியா

இந்தியாவில் பிரபலமற்ற ஒரு நிறுவனமாக இன்போகஸ் இருந்தாலும் கூட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் வருகையின் மூலம் இந்திய சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சியோமி, மோட்டோரோலா, லெனோவா, நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற பிரபலமான பிராண்டுகளுக்கு கடும்போட்டியை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
THIS smartphone packs four cameras, because it can, and costs just Rs 11,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X