Home
Mobile

ரூ.2000 விலை குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆகப்போகும் Samsung போன்.. 1TB ஸ்டோரேஜ், 25W சார்ஜிங், 50MP கேமரா!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி ஏ-சீரிஸ் (Galaxy A-Series) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "முழுதாக" ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? எப்போது அறிமுகமானது? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது, கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) மாடலை பற்றித்தான். ஏற்கனவே இது பட்ஜெட் விலையில், மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்ற அம்சங்களை வழங்குகிறது. தற்போது இதன் விலை இன்னும் குறைக்கப்பட்டு உள்ளதால், இது டிமாண்ட் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ரூ.2000 விலை குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆகப்போகும் Samsung போன்!

பழைய விலை என்ன? புதிய விலை என்ன? முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் மீது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக இது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ.12,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் க்ரீன் மற்றும் லைட் வயலெட் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டு இயங்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன், 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரூ.2000 விலை குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆகப்போகும் Samsung போன்!

மேலும் இது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 680 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கூடவே இது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்ஸ்லாட் வழியாக 1டிபி வரை விரிவாக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 13எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ரூ.2000 விலை குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆகப்போகும் Samsung போன்!

டூயல் சிம் ஆதரவுடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. கடைசியாக இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங்கின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ35மற்றும் கேலக்ஸி ஏ55 எப்போது அறிமுகமாகும்? கேலக்ஸி ஏ35 மற்றும் கேலக்ஸி ஏ55 ஆகிய இரன்டுமே கூடிய விரைவில் அறிமுகமாகும் என்றும், இவ்விரு மாடல்களும் கேலக்ஸி ஏ15 மற்றும் கேலக்ஸி ஏ25 மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் VS கூகுள்: சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் உள்ள வாய்ஸ் ஆக்டிவேட் டூல் (Voice activated tool) ஆன கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) அம்சம் மெல்ல மெல்ல அகற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சாம்சங்கின் இந்த முடிவிற்கு, கூகுள் நிறுவனத்தின் புதிய கொள்கையே காரணமாகும்.

கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய கொள்கை மாற்றத்தை (Google Policy Change) தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இருந்த கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் அணுக கிடைக்காது என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக பிக்ஸ்பி (Bixby) மற்றும் அமேசான் அலெக்சா (Amazon Alexa) போன்ற ப்ரீ-இன்ஸ்டால்ட்டு (Pre-installed) அசிஸ்டன்ட்களை பயன்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
This Samsung Phone Received Rs 2000 Price Cut in India Check Samsung Galaxy A05s New Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X