Samsung கிட்ட இருந்து இந்த 1 போனை மட்டும் வாங்கிடாதீங்க! ஒருவேளை ஏற்கனவே வாங்கிட்டா மனச தேத்திக்கோங்க!

|

நீங்கள் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் இருந்தால், அதிலும் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி மாடல்கள் (Samsung 5G Phones) மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால்.. உங்களுக்கு ஒரு அலெர்ட்!

அது என்னவென்றால், சாம்சங் நிறுவனத்திடம் இருந்து ஒரு குறிப்பிட்ட 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) மட்டும் வாங்கிவிட வேண்டாம். அதென்ன மாடல்? அதை ஏன் வாங்க கூடாது? இதோ விவரங்கள்:

எந்த மாடலை வாங்க கூடாது?

எந்த மாடலை வாங்க கூடாது?

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து நீங்கள் வாங்க கூடாத ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் என்று நாங்கள் இங்கே குறிப்பிடுவது - சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி (Samsung Galaxy F42 5G) மாடலைத்தான்!

மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் இந்தியாவில் வாங்க கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். இருந்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாம் என்று கூறுவதற்கு எங்களிடம் ஒரு நியாயமான காரணம் உள்ளது!

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

அதென்ன காரணம்?

அதென்ன காரணம்?

இந்தியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி மாடல்கள் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 (One UI 5.0) அப்டேட்டை பெற தொடங்கி உள்ளது.

உடனே "இது ஒரு நல்ல விஷயம் தானே?" என்று கேட்டு விடாதீர்கள். இதன் பின்னணியில் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. அதைப்பற்றி தெரிந்த பின்னர், நீங்கள் மட்டுமல்ல, வேறு யாராவது இந்த ஸ்மார்ட்போனை வாங்க சென்றால் கூட நீங்கள் தடுத்து விடுவீர்கள்!

அப்படி என்ன கெட்ட செய்தி?

அப்படி என்ன கெட்ட செய்தி?

அது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான One UI 4.1 அப்டேட்டை பெற்றது.

ஆக இப்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் தான் இந்த போனிற்கு வரும் கடைசி மேஜர் சாஃப்ட்வேர் அப்டேட் ஆகும். இனிமேல் இந்த ஸ்மார்ட்போனிற்கு செக்யூரிட்டி அப்டேட்கள் மட்டுமே கிடைக்கும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே, ரூ.20,000 செலவு செய்து ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் எவருமே இந்த மாடலை தேர்வு செய்ய மாட்டார்கள்!

Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!Bluebugging Attack: மொபைல் பயனர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் ப்ளூபக்கிங்! தெரியாமல் கூட இதை செஞ்சிடாதீங்க!

ஒருவேளை ஏற்கனவே வாங்கி இருந்தால்..?

ஒருவேளை ஏற்கனவே வாங்கி இருந்தால்..?

நீங்கள் ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி F42 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி விட்டீர்கள் என்றால் - பெரிதாக கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி ஏற்கனவே 1 ஆண்டு ஆகிவிட்டது. தற்போது லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டும் கிடைத்துள்ளது. ஆக, அதை இன்ஸ்டால் செய்துவிட்டு அடுத்த 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு தாராளமாக இதே ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்!

லேட்டஸ்ட் OneUI 5.0 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது எப்படி?

லேட்டஸ்ட் OneUI 5.0 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது எப்படி?

- சாம்சங் Galaxy F42 5G ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பை திறக்கவும்.

- பின்னர் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, சாஃப்ட்வேர் அப்டேட் (Software update) என்பதை கிளிக் செய்யவும்

- அதை டவுன்லோட் செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யவும்; அவ்வளவு தான்!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

Galaxy F42 5G ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை என்ன?

Galaxy F42 5G ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.

பேஸிக் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.22,999 என்கிற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது!

ரூ.20,00 க்கு Samsung Galaxy F42 5G வொர்த்-ஆ?

ரூ.20,00 க்கு Samsung Galaxy F42 5G வொர்த்-ஆ?

கண்டிப்பாக இது இன்னமும் கூட ஒரு வொர்த் ஆன 5ஜி ஸ்மார்ட்போன் தான்! ஏனென்றால் இது 5ஜி-க்கான ஆதரவை மட்டுமின்றி பெரிய டிஸ்பிளே, நல்ல கேமரா செட்டப், ஒரு நாள் முழுவதும் நீடிக்க போதுமான பேட்டரி போன்றவைகளை பேக் செய்கிறது

அதாவது இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

என்னென்னெ கேமரா..  என்ன பேட்டரி?

என்னென்னெ கேமரா.. என்ன பேட்டரி?

கேமராக்களை பொறுத்தவரை, இது 64எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் (115 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + 2எம்பி லைவ் ஃபோகஸ் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக இது 15W அடாப்டர் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
This Samsung 5G Phone Receiving One Last Major Software Update So Better To Avoid Buying it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X