இமாலய விலைக்குறைப்பு.. பொசுக்குன்னு பல ஆயிரங்கள் விலை குறைந்த Samsung-ன் பவர்ஃபுல் போன்!
ரூ.1000 இல்லை.. ரூ.2000 இல்லை.. சாம்சங் நிறுவனத்தின் பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் (Powerful Smartphone) ஒன்றின் மீது முழுதாக ரூ.32,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்சேன்ஜ் போனஸ் (Exchange Bonus), பேங்க் ஆஃபரை (Bank Offer) சேர்க்காத நேரடி விலைக்குறைப்பாகும்!
நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22 Plus) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கேலக்ஸி எஸ்23 சீரீஸ் அறிமுகமான பின்பும் கூட, எஸ்22 பிளஸ் மாடலானது இன்னமும் ஒரு சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க போனாகவே திகழ்கிறது; தற்போது நம்பமுடியாத விலைக்குறைப்பையும் பெற்றுள்ளது!

ஒருவேளை சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸின் (Samsung Galaxy S22 Series) கீழ் வாங்க கிடைக்கும் மாடல்கள் மிகவும் விலை உயர்ந்ததாக தோன்றினால், அதற்கு பதிலாக சற்றே முந்தைய மாடலான கேலக்ஸி எஸ்22 பிளஸ் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இமாலய விலைக்குறைப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
பிளாட் ஆஃபர்: ரூ.1,01,999 க்கு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ், பிளிப்கார்ட் வழியாக 31% பிளாட் ஆஃபரை பெற்று (அதாவது ரூ.32,000 என்கிற பிளாட் ஆஃபரை பெற்று) ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் மற்றும் பேங்க் ஆஃபரை பயன்படுத்தினால் இந்த போனின் விலையை இன்னும் குறைக்க முடியும்!
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: கேலக்ஸி எஸ்22 பிளஸ்-ஐ வாங்கும் போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.27,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலை மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
பேங்க் ஆஃபர்: இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு வழியாக வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். கேலக்ஸி எஸ்22 பிளஸ் மீதான இந்த சலுகை உங்கள் ஆர்வத்தை தூண்டியிருந்தால், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முன்னர் இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் நிறை - குறைகளையும் (Pros And Cons) தெரிந்து கொள்ளவும்.
முக்கிய அம்சங்கள்: கேலக்சி எஸ்22 பிளஸின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 8ஜிபி ரேம் உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், 10 எம்பி செல்பீ கேமராவையும் பேக் செய்கிறது. கடைசியாக 4500எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
நிறைகள் மற்றும் குறைகள்: கேலக்சி எஸ்22 பிளஸின் நிறைகளை பொறுத்தவரை இது கிளாஸ் லீடிங் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, உடன் நேர்த்தியான வடிவமைப்பையும் பெற்றுள்ளது. மேலும் இதன் கேமரா செட்டப் பகல் நேரங்களில் சிறப்பான அவுட்புட்டை வழங்கும் திறன்களை கொண்டுள்ளது. எஸ்22 பிளஸின் குறைகளை பற்றி பேசும் போது, இது சராசரியான பேட்டரி லைஃப்பையே வழங்குகிறது மற்றும் லோ-லைட் புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை!


Click it and Unblock the Notifications








