Home
Mobile

மார்க்கெட்டையே தூக்கிசாப்பிடும் மாடல்.. 150W சார்ஜிங், SONY கேமரா.. என்ட்ரி கொடுக்கும் ஒன்பிளஸ்.. எந்த போன்?

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) ஸ்மார்ட்போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த ஆண்டு துவக்கத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சரியாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட பத்து நாட்கள் கழித்து இந்தியாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2 போன் ஆனது ஒன்பிளஸ் 11ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் தான் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 11டி (OnePlus 11T) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

மார்க்கெட்டையே தூக்கிசாப்பிடும் மாடல்.. என்ட்ரி கொடுக்கும் ஒன்பிளஸ்..

குறிப்பாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் ஒன்பிளஸ் 11டி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6.74 இன்ச் (2772×1240 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ. மேலும் 120Hz/90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 450 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங், 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13)கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 (OxygenOS 13) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ கேமராவும் இதில் உள்ளது.

மார்க்கெட்டையே தூக்கிசாப்பிடும் மாடல்.. என்ட்ரி கொடுக்கும் ஒன்பிளஸ்..

அதேபோல சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9 ) சென்சாருடன் கூடிய 16 எம்பி செல்பீ கேமரா இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று மூன்று மாடல்களில் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் அரோரா கிரீன் (Aurora Green), டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கும்

இந்த ஒன்பிளஸ் போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 150W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி இருக்கிறது. மேலும் இந்த பேட்டரிக்கு ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் இந்தியாவில் ரூ.34,000 விலையில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This phone is likely to be launched in India as OnePlus 11T: check specifications,Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X