ரூ.9000 பட்ஜெட்டில்.. இனிமே இந்த Phone தான் கிங்கு! வேற ஆப்ஷன்ஸ் பக்கமே போக வேண்டாம்!

|

இந்திய சந்தையில் ரூ.9,000 க்குள் வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் படியான டிசைன் மற்றும் அம்சங்களுடன் - டிசம்பர் 9 ஆம் தேதி - ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் சரியான விலை விவரம் என்ன? அது எந்த பிராண்டின் மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனை தொடங்கும்? இதோ விவரங்கள்:

என்ன பிராண்ட்.. என்ன ஸ்மார்ட்போன்?

என்ன பிராண்ட்.. என்ன ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எம்04 (Galaxy M04) மாடலை பற்றித்தான்!

இது வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

கொடுக்குற காசுக்கும்.. இதோட டிசைனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது!

கொடுக்குற காசுக்கும்.. இதோட டிசைனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது!

சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனை மேலோட்டாமாக பார்க்கும் எவருமே, இதன் விலை ரூ.9000 தான் என்று கூறினால் நம்பவே மாட்டார்கள்.

ஏனென்றால், கேலக்ஸி 04 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த டிசைனுமே கொஞ்சம் பிரீமியம் லுக்கில் உள்ளது., அதாவது இது சற்றே விலை அதிகமான ஒரு ஸ்மார்ட்போனை போல தெரிகிறது!

குறிப்பாக இதன் டூயல் ரியர் கேமரா செட்டப் ஆனது மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இன்னும் சொல்லபோனால் இது - ஐபோனில் இருக்கும் டூயல் ரியர் கேமரா டிசைனை "லேசாக" காப்பி அடித்துள்ளது என்றே கூறலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் உள்ளது.

பின்னாடி மட்டுமல்ல.. முன்னாடியும் கூட நச்சுனு இருக்கு!

பின்னாடி மட்டுமல்ல.. முன்னாடியும் கூட நச்சுனு இருக்கு!

சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் ரியர் டிசைன் (பின்பக்க வடிவமைப்பு) மட்டுமல்ல முன்பக்க டிசனையும் கூட, அதாவது டிஸ்பிளேவும் கூட நன்றாகவே உள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெஸல்களையே கொண்டுள்ளது; கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே சற்றே தடினமான பெஸல் உள்ளது.

இதுவொரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை எதிர்பார்க்க கூடாது. மாறாக இது AI ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வரும். அதே சமயம் பேட்டர்ன் / பின் அடிப்படையிலான ஆத்தென்டிகேஷனை (Authentication) வழங்கக்கூடும்.

YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?

வெளியே எல்லாம் ஓகே.. உள்ளே எப்படி?

வெளியே எல்லாம் ஓகே.. உள்ளே எப்படி?

அம்சங்களை பொறுத்தவரை, இது 8ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும். இது பிஸிக்கல் ரேம் மற்றும் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) ஆகியவற்றின் கலவையாகும், சாம்சங் நிறுவனம் இதை ரேம் பிளஸ் (RAM Plus) என்று அழைக்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 128ஜிபி-ஐ பேக் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட்டின் (Android) எந்த வெர்ஷனை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான One UI 4.1 (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் தான் வரும்!

எல்லாவற்றை விடவும் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை (Software Updates) பெறும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது!

இதன் விலை ரூ.9000 க்குள் என்றால்.. சரியாக எவ்வளவு இருக்கும்?

இதன் விலை ரூ.9000 க்குள் என்றால்.. சரியாக எவ்வளவு இருக்கும்?

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது ரூ.9,000 க்குள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆக Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (Basic Variant) ஆனது ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்படலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்னதாக அறிமுகமான Samsung Galaxy A04e ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட " வெர்ஷன் (Rebranded Version) என்றும் கூறப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில், இது MediaTek Hello G35 SoC மூலம் இயக்கப்படலாம்!

Photo Courtesy: Samsung / Amazon India

Best Mobiles in India

English summary
This Phone Could Be One Of The Best Samsung Phone Under Rs 9000 in India Check Details Of Galaxy M04

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X