நோக்கியா 8-ஐ ஓரங்கட்டுங்கள் இதோ அசத்தலான நோக்கியா 9 கான்செப்ட்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆன - நோக்கியா 8, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் உலகம் முழுவதிலுமுள்ள சந்தைகளில் வெளியிடப்பட உள்ளது.

நோக்கியா 8-ஐ ஓரங்கட்டுங்கள் இதோ அசத்தலான நோக்கியா 9 கான்செப்ட்.!

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மற்றும் கார்ல் ஜெயஸ் உடனான ஒரு இரட்டை கேமரா அமைப்பு போன்ற உயர்தர அம்சங்களை கொண்டு களமிறங்கியுள்ள நோக்கியா 8 தான் மிகவும் சிறப்பான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின்று நோக்கியா பிரியர்களாகிய நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க வெளியானது - நோக்கியா 9 சார்ந்த கான்செப்ட் வீடியோ ஒன்று.!

வடிவமைப்பு ஒற்றுமை

வடிவமைப்பு ஒற்றுமை

சமீபத்தில் வெளியான நோக்கியா 8 சாதனத்தில் ஏமாற்றமளிக்கும் ஒரு விடயமாக அதன் வடிவமைப்பு உள்ளது அதாவது நோக்கியா 8 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான நோக்கியா 6 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனுடன் வடிவமைப்பு ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை

சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை

இன்னும் சொல்லப்போனால் டூயல் கேம், ஓஸோ ஆடியோ, டூயல்-சைட் மற்றும் லிக்விட் கூலிங் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை கொண்டே நோக்கியா 6 உடன் நோக்கியா 8 வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது. நோக்கியா ரசிகர்கள் கொண்டாடினாலும் விமர்சகர்களை பொறுத்தமட்டில் நோக்கியா 8 அவ்வளவு சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை.

அடுத்த தலைமை ஸ்மார்ட்போன்

அடுத்த தலைமை ஸ்மார்ட்போன்

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் - நோக்கியா 9 ஆக இருக்கலாம் என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். நோக்கியா 8 இன்னும் உலகளாவிய ரீதியில் கிடைக்கப் பெறாத நிலையில், நோக்கியா 9 எப்போது தொடங்கப்படக்கூடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும், தற்போது வெளியாகியுள்ள கான்செப்ட் வீடியோ ஒன்று நமது எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது என்றே கூற வேண்டும்.

கான்செப் க்ரியேட்டர்ஸ்

கான்செப் க்ரியேட்டர்ஸ்

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் சமீபத்திய கான்செப்ட் வீடியோவானது கான்செப் க்ரியேட்டர்ஸ் என்ற யூட்யூப் சேனல் தளத்தில் இருந்து வருகிறது. வெளியாகியுள்ள விடீயோவின் படி, இந்த சாதனம் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மிக மெல்லிய பெஸல்களை கொண்டுள்ளது.

மேற்புறத்தில் வளைந்த கண்ணாடி

மேற்புறத்தில் வளைந்த கண்ணாடி

ஸ்மார்ட்போனை பக்கங்களை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட பெஸல்களே இல்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. திரையின் மேற்புறத்தில் வளைந்த கண்ணாடி இருப்பதாகத் தோன்றுகிறது மற்றும் முழு போனிலும் ஒரு சிறிய வளைவு வடிவமைப்பையும் காணமுடிகிறது.

ஆன்-ஸ்க்ரீன் டிஸ்பிளே பொத்தான்

ஆன்-ஸ்க்ரீன் டிஸ்பிளே பொத்தான்

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் எந்த விதமான பிஸிக்கல் பொத்தான்களும் இல்லை என்பதால் இக்கருவி ஆன்-ஸ்க்ரீன் டிஸ்பிளே பொத்தான்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மேலும் வெளியான நோக்கியா 9 கான்செப்ட் வீடியோவானது, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் அடுத்த கருவிகளிலும் கார்ல் ஜெயஸ் உடனான இரட்டை கேமரா லென்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.

இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ்

இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ்

கேமராக்களை பொறுத்தமட்டில், இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட இரண்டு 13எம்பி லென்ஸ்கள் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்பக்கம் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் கீழே ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஒன்றும் காட்சிப்படுகிறது.

வெளியான விடியோ

இது தவிர்த்து வெளியான நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

Best Mobiles in India

English summary
This Nokia 9 concept video shows dual rear cameras and curved design. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X