சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!

|

பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைல் ஆக.. ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை - வெறும் ரூ.7,800 என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.7,800 மட்டுமே ஆகும்! இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? இதன் மாடல் பெயர் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்!

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்!

வெறும் ரூ.7,800 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் - பிரபல சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன விவோவின் (Vivo) லேட்டஸ்ட் மாடல்!

இது விவோ நிறுவனத்தின் ஒய் சீரீஸின் (Y Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மாடல் பெயர் - விவோ ஒய்02 (Vivo Y02) ஆகும்!

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

இதன் விலைக்கும் டிசனைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது!

இதன் விலைக்கும் டிசனைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது!

சமீபத்தில் உலகின் மிகச்சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றான எக்ஸ்90 ப்ரோ பிளஸ் (X90 Pro Plus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தே அதே விவோ நிறுவனம் தான் தற்போது "டிரெண்டி டிசைனில்" ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளேவின் மேல் புறத்தில் - வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச், ரியர் கேமரா செட்டப்பில் ரவுண்ட் கேமரா ஐலேண்ட் என இதன் வடிவமைப்பிற்கும் விலைக்கும் ஏணி வைத்தாலும் கூட எட்டாது என்றே கூறலாம்!

பெரிய டிஸ்பிளே..

பெரிய டிஸ்பிளே.. "போதுமான" கேமராக்கள்!

டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ள Vivo Y02 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இந்த டிஸ்ப்ளே 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவை வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்பக்கத்தில், ஒரு 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அது வட்ட வடிவிலான ஒரு கேமரா ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் எல்இடி ப்ளாஷ் உஒன்றும் அடங்கும்!

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

என்ன ப்ராசஸர்.. எவ்வளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ்?

என்ன ப்ராசஸர்.. எவ்வளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ்?

விவோ Y02 ஆனது 2ஜிபி மற்றும் 3ஜிபி என்கிற இரண்டு ரேம் ஆப்ஷன்களின் கீழ் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜிற்காக இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது.

தற்போது வரையிலாக, விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் இருப்பது ஒரு ஆக்டா-கோர் ப்ராசஸர் என்பது மட்டுமே தெரிய வருகிறது. ஏனென்றால், விவோ நிறுவனம் இந்த சிப்செட்டின் பெயரை அதன் அதிகாரப்பூர்வ பட்டியலில் குறிப்பிடப்படவில்லை!

இதன் பேட்டரி தான் ஹைலைட்!

இதன் பேட்டரி தான் ஹைலைட்!

ஏனென்றால், விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்டை பயன்படுத்தி 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருப்பது உண்மையிலேயே மற்ற எல்லா குறைகளையும் காணாமல் அடிக்கச்செய்யும் ஒரு அம்சம் ஆகும்!

இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

இது ஒரு 4G ஸ்மார்ட்போனா?

இது ஒரு 4G ஸ்மார்ட்போனா?

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது Android 12 (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது, அதாவது Gmail Go, YouTube Go மற்றும் Maps Go போன்ற ஆப்களின் தொகுப்பை நீங்கள் பெறுவீர்கள்.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இது 4G VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது. இந்த போனில் ஃபிங்கர் ஃபிரிண்ட் ஸ்கேனர் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது!

எப்போது இந்திய அறிமுகம்?

எப்போது இந்திய அறிமுகம்?

ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில், இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்02 ஸ்மார்ட்போன் ஆனது எப்போது இந்தியாவிற்கு வரும் என்கிற சரியான விவரஙகள் இல்லை.

இருப்பினும் பட்ஜெட் விலை போன்களுக்கான தேவை இங்கே அதிகமாக இருப்பதால், இது எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
This New Smartphone From Vivo Has Premium Look and 5000mAh battery But the Price is Just Rs 7800

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X