ஐபோன் எக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன், மூன்று மடங்கு குறைவான விலையில் அறிமுகம்.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் பெஸல்லெஸ் வடிவமைப்பானது ஒரு ட்ரெண்ட் போல ஆகிவிட்டது. இன்னும் பல நிறுவனங்கள் அதன் முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு பெஸல்லெஸ் வடிவமைப்பை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஆப்பிளுக்கு போட்டியாக ஒரு கருவியும் கிடையாது என்ற நிலைப்பாட்டில் "போட்டயாக" ஒரு ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் கருவிக்கு போட்டியாக இருப்பது மட்டுமின்றி ஐபோன் எக்ஸ் சாதனத்தை விட மூன்று மடங்கு விலைகுறைவான ஒரு ஸ்மார்ட்போன்கவும் இது திகழ்கிறது. அதென்ன கருவி.? அப்படியென்ன அம்சங்கள் கொண்டுள்ளது.? அதன் விலை நிர்ணயம் என்ன.?

அக்வாஸ் ஆர் காம்பாக்ட்

அக்வாஸ் ஆர் காம்பாக்ட்

ஷார்ப் நிறுவனம் அதன் அக்வாஸ் ஸ்மார்ட்போன் தொடரை விரிவுபடுத்தும் வண்ணம் ஒரு புதிய பெஸல்லெஸ் சாதனம் ஒன்றை அக்வாஸ் ஆர் காம்பாக்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய கொள்கை

முக்கிய கொள்கை

இது ஐபோன் எக்ஸ் மற்றும் ஆண்டி ரூபினின் எசென்ஷியல் மற்றும் சியோமி மி மைமிக்ஸ் 2 ஆகிய சாதனங்களின் முக்கிய கொள்கைகளை பின்பற்றியுள்ளது.

திருப்புமுனை அம்சம்

திருப்புமுனை அம்சம்

அக்வாஸ் எஸ் 2 ஸ்மார்ட்போனின் பெஸல்லெஸ் என்ற திருப்புமுனை அம்சம் கொண்டுள்ள அக்வாஸ் ஆர் காம்பாக்ட் ஆனது முன்னர் வெளியான ஷார்ப் அக்வாஸ் ஆர் ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாறுபாடாகும்.

பிரீமியம் வடிவமைப்பு

பிரீமியம் வடிவமைப்பு

பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒரு சிறிய மாதிரியாகும். உடன் ஒரு பிரீமியம் வடிவமைப்பு பாணியும் கொண்டு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஷார்ப் அக்வாஸ் ஆர் காம்பாக்ட் ஆனது சற்று வித்தியாசமான முன்னணி கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அது முழு திரை வடிவமைப்பின் மேல்பக்கத்தில் இடம்பெறுகிறது. கீழே, ஒரு கைரேகை ஸ்கேனர் உட்பொதிக்கப்பட்ட ஹோம் பொத்தான் உள்ளது.

எச்டி+ டிஸ்பிளே

எச்டி+ டிஸ்பிளே

ஷார்ப் அக்வாஸ் ஆர் காம்பாக்ட் ஆனது, 2032x1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.9 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் வலுவான யூஎஸ்பிகளை (USP) கொண்டுள்ளது, இது உண்மையில் பிரகாசமான டிஸ்பிளேவிற்கு வழிவகுக்கும்.

16.4எம்பி

16.4எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், பிடிஏஎப், ஹைபிரிட் ஆட்டோபோக்கஸ் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 16.4எம்பி பின்புற மற்றும் செல்பீக்களுக்கான 8எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி

ஷார்ப் அக்வாஸ் ஆர் காம்பாக்ட் அங்கத்து ஒரு இடைப்பட்ட ஸ்னாப்ட்ராகன் 660 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புடனான விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் இணைந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜ் 3.0

பாஸ்ட் சார்ஜ் 3.0

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும் இக்கருவி அதன் சிறிய வடிவமைப்பின் காரணமாக 2500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இருப்பினும் இது பாஸ்ட் சார்ஜ் 3.0 உடன் துணைபுரிகிறது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இரட்டை சிம் ஸ்மார்ட்போனான இது 4ஜி வோல்ட் ஆதரவை கொண்டுள்ளது. ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழும் கொண்டுள்ளது. சுமார் 372 அமெரிக்க டாலர்கள் என்ற விலைநிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி கருப்பு, வெள்ளை, வெள்ளி, தங்கம் ஆகிய நான்கு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
THIS new bezel-less smartphone is an iPhone X-rival 3x cheaper. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X