Home
Mobile

யார்ரா நீங்க? ரூ.500, ரூ.1000 னா ஓகே.. ஒரே அடியா ரூ.5500 விலைக்குறைப்பா! இனி இந்த Moto போனின் ரேஞ்சே வேற!

ஏற்கனவே பட்ஜெட் விலை பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மோட்டோ ஜி சீரீஸ் (Moto G Series) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.5,500 வரையிலான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போனானது "சூப்பர்-பட்ஜெட் விலை" பிரிவிற்கு இறங்கி வந்துள்ளது.

நாம் இங்கே பேசுவது மோட்டோ ஜி52 (Moto G52) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பட்ஜெட்-விலை போனின் புதிய விலை நிர்ணயம் என்ன? இது மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது? இந்த போனை யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? யாரெல்லாம் புறக்கணிக்கலாம்? இதோ விவரங்கள்:

முழுதாக ரூ.5500 விலைக்குறைப்பை பெற்றுள்ள Moto ஸ்மார்ட்போன்!

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் புதிய விலை விவரங்கள்:

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சுவாரசியமாக அந்த இரண்டுமே வெவ்வேறு அளவிலான விலைக்குறைப்புகளை பெற்றுள்ளன: 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜின் மீது ரூ.3500 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட்டின் மீது ரூ.5,500 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலைக்குறைப்புகளுக்கு பின்னர் ரூ.14,499 க்கு வாங்க கிடைத்த 4ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை ரூ.10,999 ஆகவும், ரூ.16,499 க்கு வாங்க கிடைத்த 6ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.12,999 ஆகவும் குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்னம் இந்த ஸ்மார்ட்போன் 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: சார்கோல் கிரே மற்றும் மெட்டாலிக் ஒயிட்.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை யாரெல்லாம் நம்பி வாங்கலாம்?

4 முக்கியமான காரணங்களை முன்வைத்து மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். முதல் காரணம் - இது அருமையான டிஸ்பிளேவுடன் வருகிறது. இரண்டாவது காரணம் - இது சிறப்பான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. மூன்றாவது காரணம் - இது க்ளீன் ஆன யூசர் இன்டர்பேஸை (UI) வழங்குகிறது. நான்காவது மற்றும் கடைசி காரணம் - இது நல்ல பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்?

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 2 சிறிய குறைகள் உள்ளன. அது உங்களுக்கு பெரிய குறைகளாக தெரிந்தால் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்த்து விடலாம். முதல் குறை - இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இரண்டாவது குறை - இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் சராசரியாகவே உள்ளது.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.6 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ பிஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரையிலான மெமரி எக்ஸ்டென்க்ஷனையும் வழங்கும்.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான மையுஎக்ஸ் (MyUX), டூயல் சிம் சப்போர்ட், ஸ்பிளாஷ்-ரெசிஸ்டண்ட்-ஐ வழங்கும் ஐபி52 ரேட்டிங், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸ் மூலம் ட்யூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Motorola phone Gets Massive Rs 5500 Price Cut Check Moto G52 Pros and Cons Before Buying It
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X