Home
Mobile

இந்தியாவில் விரைவில் மலிவான ஐபோன்கள் விற்கபப்டும், எப்படி.?

ஷிப்பிங் நேரம் கிடையாது, சர்வதேச சந்தை காலி.!

By Muthuraj

"ஆப்பிள் இன்க் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் அதன் கால் தடத்தை பதிக்கும் வாய்ப்பை மிகக்கலாம் போராடி பெற்றுள்ளது. அந்த வாய்ப்பை பெற்ற உடனேயே ஒரு மாதத்திற்குள்ளாகவே நகரில் அதன் உயர் இறுதி ஐபோன்களை கட்டமைக்கும் பணியை தொடங்கவுள்ளது" என்று கர்நாடகா அமைச்சர் ப்ரியன்க் கார்கே சமீபத்தில் (கடந்த வியாழன்) கூறியுள்ளார்.

பெங்களூருவில் ஐபோன்கள் கட்டமைக்கப்பட்டால் மற்றும் உருவாக்கம் பெற்றால்அது இந்திய சந்தை வளர்ச்சியை கட்டாயமாக தூண்டும் என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இந்திய மக்களாகிய நமக்கும் பல நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியாக நமக்கு என்னென்ன லாபங்கள்.??

மலிவான ஒரு கருவியாகும்

மலிவான ஒரு கருவியாகும்

ஐபோன்களின் அளவுகடந்த விலைக்கு முக்கிய காரணமாக, அவைகள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் கருவிகளாக திகழ்வதால் தான், இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் என அதன் விலை அதிகபட்ச ஸ்மார்ட்போன் கருவியின் விலையாக உள்ளது. ஒருவேளை ஐபோன்கள் இந்தியா செய்யப்படுகின்றன என்றால், அதன் உலக சுற்றுப்பயணம் (வரிகள்) கழித்தல் போக ஐபோன்கள் இந்தியாவில் நல்லதொரு மலிவான விலை கருவியாக மாறும்.

கிடைக்கக்கூடியத்தன்மை

கிடைக்கக்கூடியத்தன்மை

ஐபோன்கள் ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் மூலம் எண்ணிக்கையிலான அலகுகள் மட்டுமே வாங்கப்பட்டு மற்றும் நாட்டில் விற்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்லைன் மற்றும் ஆன்லைன் விநியோகஸ்தர்கள் ஆகிய இரண்டுமே உண்டு என்றாலும் கூட சில நேரங்களில் ஐபோன்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் சர்வீஸ் செய்யப்பட மாட்டாது என்ற நிலையில் மறுபக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் கிடையாது என்பதால் பழுது மற்றும் மாற்று அல்லது கூறுகள் கிடைக்காமல் போவது போன்ற பல சிக்கல்கள் ஆப்பிள் கருவிகளில் உள்ளன. ஒருவேளை இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால் இந்த அணைத்து சிக்கல்களும் எளிமையாக தீரும்.

போட்டிபோட வேண்டாம்

போட்டிபோட வேண்டாம்

பொதுவாக, சந்தையில் அறிமுக தினத்தன்று ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று கருவிகளை வாங்குவது வழக்கமான ஒரு விடயமாகும். ஆப்பிள் நிறுவனம் நாட்டில் அதன் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், அந்த நிறுவனம் தனது சொந்த கடைகள் இங்கு அமைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு விநியோகஸ்தரக மையங்கள் வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நில்லாமல் நேரடியாக கடைகளில் இருந்து ஐபோன்களை வாங்கலாம்.

ஷிப்பிங் நேரம் கிடையாது

ஷிப்பிங் நேரம் கிடையாது

ஆப்பிள் ஒரு புதிய தயாரிப்பின் அறிவிப்பு வெளியிட்ட பின் நமது காத்திருப்பு தொடங்குகிறது. காத்திருப்பு என்றால் புதிய கருவி ஆப்பிள் ஸ்டோர்களை அடைய வேண்டும் பின்னர் மற்ற நாடுகளுக்கு ஷிப்பிங் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தம். ஆப்பிள் நிறுவனம் அதன் கருவிகள் சார்ந்த ஷிப்பிங் பணியை நிகழ்த்த உலக நாடுகளை மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது அதில் இந்தியா மூன்றாவது மண்டலமாகும். இந்தியாவில் ஐபோன் விநியோக மற்றும் வெளியீட்டு காலவரிசையல் முன்னேற்றம் இருக்கிறது என்றாலும் கூட அது இன்னும் திருப்திகரமானதாக இல்லை. ஒருவேளை ஆப்பிள் இந்தியாவில் அதன் பொருட்களின் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், நாம் ஷிப்பிங் நடக்கும் காலம் வரை காத்திருக்க அவசியம் இருக்காது.

சர்வதேச சந்தை காலி

சர்வதேச சந்தை காலி

நாட்டில் பெரும்பாலானோர்கள் ஐபோன்களை இரண்டு காரணங்களுக்காக சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குகின்றர். ஒன்று மலிவான விலை மற்றும் இரண்டாவது கருவிகள் விரைவில் ஷிப்பிங் செய்யப்படும் என்பதால் தான் வாங்கப்படும் அலகுகளுக்கு எந்த விதமான உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்கள் சர்வதேச சந்தைகளில் இருந்து ஐபோன்களை வாங்க விரும்புகின்றனர். ஒருவேளை ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் சர்வதேச கொள்முதல் நிச்சயமாக கீழே இறங்கும், மக்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற ஐபோன்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

ஆப்பிளுக்கு லாபம்

ஆப்பிளுக்கு லாபம்

இந்தியாவில் தயாரிப்பு மேற்கொள்ளவதின் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனமும் சிறந்த இலாபங்களை அனுபவிக்கும். அதாவது இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் நீக்கப்படும், ஆப்பிள் கப்பல் செலவுகளில் ஒரு கணிசமான அளவு சேமிக்க முடியும். விலை குறைக்கப்பட்டாலும் இந்தியாவில் கருவிகள் செய்யப்படுகின்றன என்பதால் ஐபோன்களின் வருவாயில் கணிசமான உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
This may pave way for 'cheaper iPhones' in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X