சீன தயாரிப்புகளுக்கு ஆப்பு : இப்போது தான் நாம் இந்தியர்களாக நடந்து கொண்டுள்ளோம்.!

ஸ்மார்ட்போன் வாங்க செல்லும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் "இந்த சாதனம் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா.?" என்ற கேள்வியை விற்பனையாளரை பார்த்து கேட்க தயங்குவதில்லை, தவறுவதில்லை

|

"எப்படியாச்சும் ஒரு 400 ரூபாய் சேர்த்து வச்சி சூப்பரான ஸ்பீக்கரோட சீனா செட் ஒன்னு வாங்கிடணும்" என்று நாம் அலைந்திரிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்திய சந்தைக்குள் கிடைக்கும் பொருட்களை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டுமென்ற குரல்கள் ஆங்காங்கே கேட்க தொடங்கிவிட்டன.

அந்த குரல்கள் எந்த அளவு பலமானதாக உள்ளதென்பதற்கான ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் சுமார் 50,000 பேர் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பின் முடிவு. சபாஷ் இந்தியர்களே..இப்போது தான் நாம் இந்தியர்களாக நடந்து கொள்ள துவங்கியுள்ளோம்.!

சீனாவில் தயாரிக்கப்படுகிறதா.?

சீனாவில் தயாரிக்கப்படுகிறதா.?

ஸ்மார்ட்போன் வாங்க செல்லும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் "இந்த சாதனம் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா.?" என்ற கேள்வியை விற்பனையாளரை பார்த்து கேட்க தயங்குவதில்லை, தவறுவதில்லை என்று ஆரம்பிக்கும் போதே சீன கருவிகளின் மோசமான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

சுமார் 50,000 பேர்

சுமார் 50,000 பேர்

முன்பு குறிப்பிட்டது போல சுமார் 50,000 பேர் பங்கு கொண்டுள்ள இந்த ஆய்வில் சீனாவில் இருந்து இறக்குமதியான ஸ்மார்ட்போன்களை விட தங்களது நாட்டில், அதாவது இந்தியாவிலில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தான் அதிக நம்பகமானவைகளாக இருக்கிறதென்று பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளன.

52% குடிமக்கள்

52% குடிமக்கள்

லோக்கல்சர்கிள்ஸ் (LocalCircles) நடத்திய இந்த ஆய்வில், 52% குடிமக்கள், சீன பொருட்களை விட இந்திய பொருட்கள் தரமானதாக இருப்பதக நம்புகின்றனர். 21% மக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தான் சிறப்பானவை என்றும், 17 சதவிகித மக்கள் இந்தியாவும் சரி, சீனாவும் சரி இரண்டுமே தரத்தில் ஒரேமாதிரி தான் உள்ளன என்றும் தங்களின் கருத்தை பதிவு செய்துள்ளன.

எந்த வகையான சீனத்தயாரிப்பு.?

எந்த வகையான சீனத்தயாரிப்பு.?

கடந்த சில ஆண்டுகளாக, சீன பொருட்களின் மிகவும் மலிவான விலை நிர்ணயத்தை எதிர்த்து போட்டிபோட முடியாமல் இந்தியாவின் பல வகையான சிறு தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக, கைவிடப்பட்டுள்ளதாக என்கிறது மற்றொரு ஆய்வறிக்கை.
கணக்கெடுப்பில் பங்குகொண்ட குடிமக்களிடம் "நீங்கள் எந்த வகையான சீனத்தயாரிப்புகளை அதிகம் நுகர்கிறீர்கள் என்று கேட்டபோது "மொபைல்களையும் பிற மின்னணு பொருட்களையும்" என்ற பதில் கிடைத்துள்ளது.

ஏன் சீன உற்பத்தி.?

ஏன் சீன உற்பத்தி.?

இன்னொரு கருத்து கணிப்பானது, இந்திய மக்கள் ஏன் சீன உற்பத்தியை அதிகம் வாங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது சுமார் 33% மக்கள் மலிவானது என்ற காரணத்தினால் வாங்குவதாகவும், 17% மக்கள் மலிவான அதே சமயம் ஒழுக்கமான தரம் கொண்டுள்ளதாக வாங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்தேகமேயில்லை

சந்தேகமேயில்லை

சீனப் பொருட்கள் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை. சீன பொருட்கள் தரத்தில் சிறந்ததாக இருக்காது என்பதை முன்னரே அறிந்தும் கூட இந்திய பொருட்களை விட மிக மலிவான விலைக்கு கிடைக்கிறதென்ற ஒரே காரணத்தினாலேயே இந்தியர்கள் சீன பொருட்களை அணுகுகின்றன என்பது இதிலிருந்து (இந்த ஆய்வுகளில்) வெளிப்படை.

Best Mobiles in India

English summary
This may be 'bad news' for Chinese smartphone makers in India. Read more about this about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X