Home
Mobile

Samsung க்கு குத்து.. Motorola க்கு ஏத்து.. டாப் 5 பட்ஜெட் போன்கள்.. நம்பர் 1 இடத்தில் சீன மொபைல்!

ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் விலை போன்களின் பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று முதலிடத்திற்கு முந்தியுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? இந்த டாப் 5 பட்டியலில் உள்ள மற்ற மாடல்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்

ஒரு ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருந்தால் அதிலுள்ள அம்சங்களும் குறைவாகவே இருக்கும் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது சகஜமாகி விட்டது. குறிப்பாக ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்!

டாப் 5 பட்ஜெட் போன்கள்: நம்பர் 1 இடத்தில் சீன மொபைல்!

அப்படியாக ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இந்த டாப் 5 பட்டியல் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்; ஒரு முடிவுக்கு வர உதவும்.

05. Poco C3 - விலை ரூ.8,990

ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் போன்கள் என்கிற பட்டியலின் 5-வது இடத்தில் இருப்பது போக்கோ சி3 ஸ்மார்ட்போனாகும்.

இது 6.53-இன்ச் டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 13MP மெயின் கேமரா + 2MP போர்ட்ரெய்ட் ரியர் லென்ஸ் + 2MP மேக்ரோ கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

04. Realme Narzo 50i - விலை ரூ.6.944

4-வது இடத்தில் இருப்பது ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனாகும். இது 6.5-இன்ச் டிஸ்ப்ளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

03. Samsung Galaxy F04 - விலை ரூ.9,399

3-வது இடத்தில் இருப்பது சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனாகும். இது மீடியாடெக் பி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து மெமரியை "கடன் வாங்கும்" ரேம் பிளஸ் (RAM Plus) அம்சத்துடன் வருகிறது. இதுவொரு 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆபர் விலையில் Samsung Galaxy S23.. கண்ணை மூடிக்கிட்டு வாங்க 6 காரணங்கள்.. வாங்காமல் இருக்க 3 காரணங்கள்!

02. Moto G22 - விலை ரூ.9,699

2-வது இடத்தில் இருப்பது மோட்டோரோலா மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனாகும். இது 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை வழங்கும்.

01. Infinix Note 12i - விலை ரூ.9,999

இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 12ஐ ஸ்மார்ட்போனாகும்.

இது நீண்ட பேட்டரி லைஃப், டக்குனு திரும்பி பார்க்க வைக்கும் விலையை மீறிய டிசைன் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு எந்த குறையும் வைக்காத டிசன்ட் ஆன பெர்ஃபார்மென்ஸ் போன்ற காரணகளுக்காக முதல் இடத்தை பிடித்துள்ளது.

இது 60Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, டிடிஎஸ் ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்ஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி85 அல்ட்ரா கேமிங் ப்ராசஸர், 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 50MP அல்ட்ரா நைட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
This Latest Infinix Phone Overtake Samsung, Realme, Poco, Motorola And Becomes Best Mobile Which You can buy Under Rs.10000 in India Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X