மார்ச் 27-ல் அறிமுகமாகும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்-ன் பிரதான அம்சங்கள்.!

இரட்டை சிம் ஆதரவு கொண்ட மி மிக்ஸ் 2எஸ் ஆனது ஒரு ஐஆர் பிளாஸ்டர் கொண்டும் வெளியாகலாம்.

|

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் ஆனது, வருகிற மார்ச் 27-ஆம் தேதியன்று அதன் அதிகாரப்பூர்வமான வெளியீட்டை சந்திக்கவுள்ளது. இந்த சீன வெளியீட்டை தொடர்ந்து மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் லீக்ஸ் ஒரு வெளியாகியுள்ளது.

மார்ச் 27-ல் அறிமுகமாகும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்-ன் பிரதான அம்சங்கள்.!

வெளியான வீடியோவில், கூறப்படும் மி மிக்ஸ் 2எஸ் அந்த முன்னர் வெளியான மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை போலவே ஒரு பழக்கமான வடிவமைப்பு கொண்டிருப்பதை காணமுடிகிறது. இதற்கு முன்னர், சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆனது பொலரிஸீஸ் எனப்படும் வெளிப்படையான குறியீட்டு பெயரின் கீழ் பல கசிவுகள் மற்றும் வதந்திகளுக்கு உட்பட்டுள்ளது என்பதும் அதன் வழியாக கருவியின் பெரும்பாலான பிரதான அம்சங்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, மி மிக்ஸ் 2எஸ் ஆனது 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 செயலி ஆகியவற்றுடன் வெளிவரும். மேலும் இக்கருவி ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒரு 3,400எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். இது வரை வெளியான வதந்தைகளின்படி, இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு வரை நீளும்.

கேமராத்துறை பொறுத்தமட்டில், அளவீடுகள் அறியப்படாவிட்டாலும் கூட, இதன் பின்புற கேமராவானது புகைப்படங்களை பதிவு செய்யும் முறையையே மாற்றியமைக்கும் சில ஹை-எண்ட் அம்சஙகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சில செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்டு வெளியாகுமென்று அர்த்தம். இரட்டை சிம் ஆதரவு கொண்ட மி மிக்ஸ் 2எஸ் ஆனது ஒரு ஐஆர் பிளாஸ்டர் கொண்டும் வெளியாகலாம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ரூ.35,999/-க்கு அறிமுகமான மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் - க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, 6 ஜிபி ரேம், ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார் + இரட்டை எல்இடி பிளாஷ்), 1080பி மற்றும் 4கே வீடியோ ஆதரவு, 3,400எம்ஏஎச் பேட்டரி ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ ஆகியவைகளை கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

மறுகையில் உள்ள மி மிக்ஸ் 2எஸ் ஆனது அடுத்த தலைமுறை வன்பொருள் மற்றும் சில ஆடம்பரமான புதிய ஏஐ தந்திரங்களை கொண்டு, ஒரு மேம்படுதத்ப்பட்ட கருவியாக வெளியாகும் என்பது போல தெரிகிறது. இக்கருவி சார்ந்த மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
This is the Xiaomi Mi Mix 2S, launch set for March 27. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X