மொத்த சீன கம்பெனிகளுக்கும் ஷாக் கொடுத்த இந்திய நிறுவனம்! யாருமே கொடுக்க முடியாத விலைக்கு 5G Phone விற்பனை!

|

வழக்கமாக சீனாவை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தான், இந்தியாவில் மிகவும் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும்.

ஆனால் இன்று முதல் (அதாவது நவம்பர் 15 முதல்) அந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது! அதற்கு மூல காரணம் - ஒரு இந்திய நிறுவனம் தான்!

அதென்ன நிறுவனம்.. அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன நிறுவனம்.. அதென்ன ஸ்மார்ட்போன்?

இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஒரு மொபைல் பிராண்ட் ஆனது - சியோமி, ரெட்மி, ரியல்மி, ஒப்போ, விவோ போன்ற - சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் கூட வழங்க முடியாத விலைக்கு ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) அறிமுகம் செய்தது மட்டுமன்றி, அதை விற்பனையும் செய்ய தொடங்கி உள்ளது.

அதென்ன நிறுவனம்? அது விற்பனை செய்யும் 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? அதை யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் வாங்காமல் தவிர்க்கலாம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

பிள்ளையார் சுழி போட்ட லாவா!

பிள்ளையார் சுழி போட்ட லாவா!

இவ்வளவு குறைவான விலைக்கு கூட ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடியும்; விற்பனை செய்ய முடியும் என்று நிரூபிக்கும் வண்ணம் ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது வேறு யாரும் அல்ல - இந்திய மொபைல் போன் பிராண்ட் ஆன லாவா (Lava) தான்!

இந்நிறுவனம் அறிமுகம் செய்து, விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்போன் - லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) மாடல் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது!

அறிமுக விலையும்.. ஆபர் விலையும்!

அறிமுக விலையும்.. ஆபர் விலையும்!

லாவா நிறுவனத்தின் புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். ஆனால் இது அறிமுக சலுகையின் கீழ் வெறும் ரூ.9999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சலுகை இன்று (நவம்பர் 15) மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் க்ரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் லாவா பிளேஸ் 5ஜி மாடலை யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்யலாம்? வாருங்கள் அதன் அம்சங்களை அலசி பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்!

நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?

டிசைனில் உள்ள நிறை மற்றும் குறை!

டிசைனில் உள்ள நிறை மற்றும் குறை!

டிஸைனை பற்றி பேசும்போது, முன்பக்கத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால், இது பிளாட் எட்ஜ் டிசைன் மற்றும் வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.

ஆனால் பேக் பேனலில் ஒரு சிறிய குறை உள்ளது. அது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்களில் ஒன்று ஸ்கொயர் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளதால், இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது சற்று வித்தியாசமாக தெரிகிறது!

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் என்கிற பெரிய அளவிலான டிஸ்பிளேவையே கொண்டுள்ளது. இது ஒரு HD+ IPS டிஸ்பிளே ஆகும். இது 720x1,600 ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவையும் கூட வழங்குகிறது.

ரூ.10,999 க்கு இதை விட சிறந்த டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம் தான். ஆனால் அதில் 5ஜி சப்போர்ட்-ஐ எதிர்பார்க்க முடியாது. ஆகையால், லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு டிஸ்பிளே என்றே கூறலாம்!

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

கேமராக்கள் நல்லா இருக்குமா?

கேமராக்கள் நல்லா இருக்குமா?

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் கேமராவால் 2K வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மீதமுள்ள சென்சார்கள் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் இல்லை. பெரும்பாலும் அது 2எம்பி கேமராக்களாகத்தான் இருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது.

கேமரா ஓகே-வா.. நாட் ஓகே-வா?

கேமரா ஓகே-வா.. நாட் ஓகே-வா?

கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இது பியூட்டிஃபை, எச்டிஆர், நைட், போர்ட்ரெய்ட், மேக்ரோ, ஏஐ, ப்ரோ, யுஎச்டி, பனோரமா, ஸ்லோ மோஷன், ஃபில்டர்ஸ், ஜிஐஎஃப், டைம்லேப்ஸ் மற்றும் க்யூஆர் ஸ்கேனர் போன்ற மோட்களுடன் வருகிறது.

ரூ.11,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் கேமரா டிப்பார்ட்மென்டில் இதை விட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே இதன் கேமராக்கள் - ஓகே தான்!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

என்ன பேட்டரி.. என்ன ப்ராசஸர்?

என்ன பேட்டரி.. என்ன ப்ராசஸர்?

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது மிகவும் பொதுவான மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பேட்டரி கேப்பாசிட்டி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை!

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக்கின் டைமன்சிட்டி 700 சிப்செட்டை பேக் செய்கிறது. இந்த சிப்செட் n77 மற்றும் n78 பேண்ட்ஸ் உட்பட மொத்தம் எட்டு 5ஜி பேண்ட் களை ஆதரிக்கிறது! இதுவொரு நல்ல எண்ணிக்கை ஆகும்; ஆக நம்பி வாங்கலாம்!

Best Mobiles in India

English summary
This Indian company gave a shock to all Chinese Mobile Brands Selling its 5G phone for just Rs 10999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X