விலை குறைக்கலாம்.. அதுக்காக இப்படியா.. ரூ.45,000 விலை குறைப்பை பெற்றுள்ள Samsung போன்.. என்ன மாடல்?
பட்ஜெட் (Budget) மற்றும் மிட்-ரேன்ஜ் (Mid-range) விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி 'போர்' அடித்து விட்டதா? பிளாக்ஷிப் (Flagship) மற்றும் பிரீமியம் (Premium) போன்களை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான பட்ஜெட் இல்லையா? ஆம் என்றால்.. அமேசான் வழங்கும் இந்த ஆஃபர் 100% உங்களுக்கானது தான்!
போதும்-போதும் என்று கூறும் அளவிலான 1டிபி ஸ்டோரேஜ், குறையே சொல்ல முடியாத ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், உங்களுடைய வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing Experience) அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் இன்ஃபினிட்டி-ஓ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.45,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தள்ளுபடியானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ (Samsung Galaxy S20 FE) ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை (Original Price) என்ன? தள்ளுபடிக்கு பிறகான விலை நிர்ணயம் (Offer Pirce) என்ன? இந்த ஸ்மார்ட்போனை இப்போதைக்கு நம்பி வாங்கலாமா? இதிலுள்ள நிறைகள் மற்றும் குறைகள் (Pros and Cons) என்னென்ன? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.74999 ஆகும், இருப்பினும் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது இதை ரூ.29999 க்கு விற்பனை செய்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் மீது 60% தள்ளுபடி கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் மீது பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கிறது.
எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனையிலும் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பொறுத்தவரை ரூ.27450 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் வேல்யூவானது (Exchange Value) நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலைமையை பொறுத்தது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் இன்ஃபினிட்டி-ஓ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டாகோர் (Qualcomm Snapdragon 865 Octa-Core) ப்ராசஸர் போன்றவைகளை கொண்டுள்ளது.
மேலும் இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது 12எம்பி மெயின் கேமரா + 8எம்பி ஓஐஎஸ் டெலி லென்ஸ் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனின் நிறைகளை பொறுத்தவரை, இது கைக்கு அடக்கமான மிகவும் சிறிய வடிவமைப்பை (Compact Design) பெற்றுள்ளது. இன்றைக்கும் கூட மிகவும் மென்மையான செயல்திறனை (Smooth Perfromance) வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனாக உள்ளது. ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) உடன் வருகிறது. சற்றே சிறிய பேட்டரியை கொண்டிருந்தாலும் கூட இது நீண்ட நேர பேட்டரி லைஃப்பை (Long Battery Life) வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனின் குறைகளை பொறுத்தவரை, இதன் ஒட்டுமொத்தமா கேமரா செட்டப் ஆண்டு நல்ல அவுட்புட்டை வழங்கினாலும் கூட, இதிலுள்ள வைட் ஆங்கிள் சென்சார் அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் இது நல்ல, போதுமான பேட்டரி லைஃப்பை வழங்கினாலும் கூட இது 15W சார்ஜருடன் தான் அனுப்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








